சுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம் 

சுகாதாரநல மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றும் எல்&டி கட்டுமான நிறுவனம்  

 

சென்னை, ஜுன் 2, 2020: கட்டுமானம் மற்றும் ஆலைகள் உருவாக்கத்தில் ஈடுபட்டு வரும் எல்&டி கட்டுமான நிறுவனம், இந்தியா முழுவதும் ஏற்கனவே நிறுவப்பட்ட அல்லது கட்டுமானம் நடந்துவரும் மருத்துவமனைகளை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றுகிறது. இதை செயல்படுத்தும்விதமாக, லார்சன் & டூப்ரோவின் கட்டுமானப் பிரிவான இந்நிறுவனம் நோக்கம் சார்ந்தும் வேகமான அணுகுமுறையோடும் இயங்கி வருகிறது. தற்போது நியூடெல்லி, சம்பரான், பீகாரில் மாதேபுரா, புதுச்சேரி, மேற்கு வங்கத்தில் டயமண்ட் ஹார்ஃபர், உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூர் ஆகிய நகரங்களில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை உள்கட்டமைப்பை கோவிட்-19 பராமரிப்பு வசதிகள் கொண்டதாக மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

    இந்நிறுவனம்,.மூன்று முதல் நான்கு மாதங்களில் 300 படுக்கை கொண்ட மருத்துவமனைகளைக் கட்டமைக்கும் சாதனைத் திறன் கொண்டது   இதன் மூலம், தற்போது செயல்பாட்டில் இருந்து வரும் அல்லது கட்டுமானப் பணிகள் நடந்துவரும் மருத்துவ உள்கட்டமைப்பை கோவிட்-19 வைரஸ் தொற்று சிகிச்சை தொடர்பான வசதிகள் கொண்டதாக மாற்றும் மேம்பட்ட திறனையும் பெற்றிருக்கிறது. திருமண மண்டபங்கள், பள்ளிகள், ஹோட்டல் அறைகள் உள்ளிட்டவற்றை உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றுவதிலும்  இந்நிறுவனம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது..

 

    இந்த செயல்பாடு குறித்து எல்&டி, முழுநேர இயக்குனர் மற்றும் மூத்த நிர்வாக துணைத்தலைவர் (கட்டுமானங்கள், தாதுக்கள்& உலோகங்கள்) திரு.எம்.வி.சதீஷ் (Mr. M V Satish, Whole Time Director and Senior Executive Vice President (Buildings, Minerals & Metals), L&T) பேசுகையில், “நாங்கள் சிறந்த பொறியியல், கட்டுமானத் திறன்களைக் கொண்டிருப்பதால், சுகாதார உள்கட்டமைப்பை கோவிட்-19 பராமரிப்புக்காக விரைவாக மாற்றித் தருகிறோம். நாடு கடினமான சூழ்நிலையில் இருக்கும்போது துணை நிற்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். இதன் தொடர்ச்சியாக, கோவிட்-19-க்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில், போராட்டத்தில் லார்சன் & டூப்ரோ தனது மற்றுமொரு பங்களிப்பை வழங்கியிருக்கிறது. சிக்கலான சுகாதாரப் பராமரிப்பு உள்கட்டமைப்பை அமைப்பதன் மூலமாக, குடிமக்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் அரசின் முயற்சிகளுக்கு நாங்கள் என்றென்றும் துணை நிற்போம்” என்று தெரிவித்தார். 

 

    தொடர்ந்து பேசிய சதீஷ் “பிரதமர் பராமரிப்பு நிதிக்கு எல்&டி குழுமம் வழங்கிய 150 கோடி ரூபாய் நன்கொடையைத் தவிர்த்து, எங்களது பல்வேறு பணியிடங்களில் பணியாற்றிவரும் 1,60,000-க்கும் அதிகமான பணியாளர்களின் நலனை அக்கறையுடன் கவனித்து வருகிறோம். பல்வேறு மாநிலங்களின் நலன்களுக்காக பணம் மற்றும் இதர வசதிகளை அளித்து வருகிறோம். ரூ.40 கோடி மதிப்புள்ள தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், என்95 முகக்கவசங்கள், சோதனைக் கருவிகள், இதர மருத்துவ சாதனங்கள் உட்பட மருத்துவ உதவிகளையும் எல்&டி அளித்திருக்கிறது. இந்த நோய்த்தொற்று காலத்தில் பல்வேறு அரசு நிறுவனங்களுடன் இணைந்து தேவையான அளவுக்கு சுகாதாரப் பராமரிப்பு கட்டமைப்பை உருவாக்கி வருகிரது எங்களது மருத்துவமனை கட்டமைப்பு பிரிவு” என்று கூறினார். 

 

    கீழ்க்கண்ட மருத்துவமனைகளில் மாற்றம் செய்து பராமரிப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது இந்நிறுவனம்.       

 

ஜிப்மர், மூன்றாம் தொகுப்பு, புதுச்சேரி

 

    புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் பழைய மருத்துவமனையையும் கல்வி நிறுவனக் கட்டிடங்களையும் நவீனமாக்கி, அங்குள்ள அதிசிறப்பு தொகுதியை விரிவுபடுத்தி, புறநோயாளிகளுக்கான சோதனை வசதிகளை அமைத்து சாதனை படைத்திருந்தது எல்&டி. 2019-ம் ஆண்டு எல்&டியால் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட எஸ்எஸ்பி இணைப்பு தொகுதியானது ஜிப்மர் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. தற்போது, அதுவே கோவிட்-19 நோயாளிகளைக் கையாளும் புதுச்சேரி அரசின் தேவைக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் தளத்திலுள்ள 50 படுக்கைகள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இரண்டாம் தளத்திலுள்ள 100 படுக்கைகள் சிறப்பு வார்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் முழுதாக ஜிப்மர் வசம் முடித்து ஒப்படைக்கவில்லை என்றபோதிலும், அதிசிறப்பு தொகுதி முழுதாகப் பூர்த்தியாகி தற்போது பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

 

சப்தர்ஜங் மருத்துவமனை, நியூடெல்லி: 

 

    எல்&டி கட்டிய மூன்று தளங்கள், 850 படுக்கைகள் கொண்ட அதிசிறப்பு சப்தர்ஜங் மருத்துவமனையானது, இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 2020 மார்ச் மாதம் கோவிட்-19 நோயாளிகள் பராமரிப்புக்காக மாற்றப்பட்டது. நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள், மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவதால், மண்டலம் 1-ல் முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் 75 படுக்கைகளுடன் இருக்கும் உள்நோயாளிகள் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட வார்டாக மாற்றப்பட்டுள்ளது. மண்டலம் 2-ல் 1-வது, 2-வது மற்றும் 3-வது தளங்களில் 425 படுக்கைகள் கொண்ட பகுதி சோதனை செய்யப்பட்டவர்களுக்கான சிறப்பு மற்றும் பொது சிகிச்சைப் பிரிவுகளாகவும், கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கக் கூடியதாகவும் மாற்றப்பட்டுள்ளது. 

 

இந்திரா காந்தி மருத்துவமனை, நியூடெல்லி

 

    துவாரகா, செக்டார் 9-ல் 700 படுக்கைகள் கொண்டதாகத் திட்டமிடப்பட்ட இந்திரா காந்தி மருத்துவமனையில் 200 படுக்கைகள் வரை அமைக்கப்பட்டு பாதியளவு தயாரான நிலையில் இருந்தது. டெல்லி பொதுப்பணித் துறையின் வேண்டுகோளுக்கிணங்க, இம்மருத்துவமனையைத் தனிமைப்படுத்துதல் வசதிக்காகத் தயார்படுத்தியுள்ளது எல்&டி. இதற்காக தரைதளம் மற்றும் முதல் தளத்தில் 200 படுக்கை வசதி கொண்ட வெளிநோயாளிகள் பிரிவு முழுவதும் மிகக்குறைவான நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

 

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சம்பரான், பீகார்

 

    பீகாரின் சம்பரானிலுள்ள அரசு மருத்துவமனையின் தரை தளம் மற்றும் முதல் தளத்தில், கோவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான 150 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை அமைத்து ஒப்படைத்துள்ளது எல்&டி. தேசிய அளவிலான ஊரடங்கின்போது வெறும் 10 நாட்களில் இந்த மாற்றத்தை எல்&டி குழுவினர் மேற்கொண்டுள்ளனர். தேவையான வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகளுடன் கூடிய அவசர சிகிச்சைப் பிரிவு, மருத்துவ வாயுக் குழாய் அமைப்பு, ஒரு திரைச்சீலை அமைப்பு, தற்காலிக கழிவுத் தொட்டி, மின்வாரியத்திடம் இருந்து தற்காலிக மின்சார விநியோக வசதி மற்றும் கோவிட்-19 பிரிவுக்குத் தனியாக ஒரு கான்கிரீட் சாலை உள்ளிட்ட வசதிகள் இதில் அடங்கும்.  

 

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாதேபுரா, பீகார்

 

    பீகார் மாநில அரசுக்காக ஆண்டுக்கு 100 மாணவர்கள் பயிலக் கூடிய, 500 படுக்கைகள் கொண்ட கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரியைக் கட்டி வந்தது எல்&டி. மாநில அரசின் வேண்டுகோளுக்கிணங்க, மருத்துவக் கல்லூரியின் ஒரு தொகுதி கோவிட்-19 சோதனைக்கூடமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 நோயாளிகளை மிகத்திறமுடன் மாநில அரசு கையாள, இந்த பிஎஸ்எல்-3 நிலையிலான ஆய்வுக்கூடம் உதவும்.   

 

மேற்கு வங்க மருத்துவக் கல்லூரி, டயமண்ட் ஹார்ஃபர், மேற்கு வங்கம்

 

    மேற்கு வங்கத்திலுள்ள டயமண்ட் ஹார்ஃபரில், மேற்கு வங்க மாநில அரசுக்காக ஆண்டுதோறும் 100 மாணவர்கள் வீதம் சேர்க்கும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரியை வடிவமைத்து கட்டியது எல்&டி. மாநில அரசின் வேண்டுகோளுக்கிணங்க, மருத்துவக் கல்லூரி தொகுதியை கோவிட்-19 ஆய்வுக்கூடமாக மாற்றியுள்ளது எல்&டி நிறுவனம். கோவிட்-19 நோயாளிகளை திறமையுடன் மாநில அரசு கையாள, இந்த பிஎஸ்எல்-3 நிலையிலான ஆய்வுக்கூடம் உதவும். 

 

ஏஐஐஎம் எஸ் கோரக்பூர், உத்தரப் பிரதேசம்

 

    கோரக்பூர் ஏஐஐஎம்எஸ்ஸில் ஆண்டுக்கு 150 மாணவர்கள் பயிலும் திறன் கொண்ட அரசு மருத்துவக் கல்லூரியை வடிவமைத்து, இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக்காக 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையைக் கட்டியிருந்தது எல்&டி. உத்தரப் பிரதேச மாநில அரசின் வேண்டுகோளுக்கிணங்க, மருத்துவக் கல்லூரி தொகுதியை கோவிட்-19 ஆய்வுக்கூடமாக மாற்றம் செய்துள்ளது எல்&டி. இது, கோவிட்-19 சோதிக்கும் முறையை துரிதப்படுத்துவதாக அமையும்.

 

நிறுவனத்தின் பின்னணி:

    இந்தியாவைச் சேர்ந்த லார்சன்  &  டூப்ரோ பன்னாட்டு நிறுவனமானது தொழில்நுட்பம், பொறியியல், கட்டுமானம், உற்பத்தி மற்றும் நிதிச் சேவைகள் போன்றவற்றில் ஈடுபடுகிறது. 21 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக வருவாய் பெற்று வருகிறது. உலகம் முழுக்க 30 நாடுகளில் செயல்படுகிறது. வலுவான, வாடிக்கையாளரை மையப்படுத்திய அணுகுமுறை, உயர்தரத்திற்கான தொடர்ச்சியான தேடல் ஆகியன கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக எல்&டி இந்த வர்த்தகங்களில் தலைமையிடத்தை அடையவும் அதைத் தக்கவைக்கவும் உதவுகின்றன.

Related posts

Leave a Comment