Home

ப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19

ப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு – கோவிட்-19 காலகட்டத்துக்குப் பிறகு திட்டங்களின் நிலைமை!

நிதியமைப்பும் தொழிலாளர் நிலைமையும் மறுதொடக்கத்தின் வேகத்தைக் குறைக்கின்றன!

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த மற்றும் புதிய திட்டங்கள் குறித்த தகவல்களைத் தொகுத்துவரும் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனமான ப்ராஜக்ட்ஸ் டுடே, தேசிய அளவில் நிபுணர்களைக் கொண்டு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இத்திட்டங்களை மேற்கொண்டு வருபவர்கள் நடப்புச் சூழல் குறித்து என்ன நினைக்கின்றனர், அவர்களது பார்வை என்ன, ஊரடங்கு காலகட்டத்துக்குப் பிறகு எந்தெந்த திட்டங்களில் முதலீடு மேற்கொள்ளப்படும் ஆகியன குறித்து இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் தொடர்புடைய நபர்களில் இருந்து (முதலீட்டாளர்கள், திட்ட வடிவமைப்பாளர்கள், ஆலோசகர்கள், ஒப்பந்ததாரர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்ட 233 பேர் இந்த கருத்துக்கணிப்புயில் பங்கேற்றனர்.

 ,                                                            

    மருந்து நிறுவனங்கள், சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்கள் தவிர மற்றனைத்து துறைகளும் தற்போதைய ஊரடங்கினால் பாதிக்கப்பட்டிருப்பதைப் பெரும்பாலான பங்கேற்பாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் இவையனைத்தும் மீண்டும் இயங்க சில காலமாகும். 

 

    60 நாட்களுக்கும் மேலாகத் தொடரும் தேசிய அளவிலான ஊரடங்கு ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் முடக்கியுள்ளது. நோய்த்தொற்று எப்போது குறையும் அல்லது ஆலைகளும் அலுவலகங்களும் எப்போது மீண்டும் செயல்படத் தொடங்கும் என்பது பற்றி தீர்வு சொல்ல வழியில்லாமல் வாடிக்கையாளர்கள், அரசு, உற்பத்தியாளர்கள் என்று அனைவருமே நிலையற்று இருக்கின்றனர். 

 

    இந்தியா மட்டுமல்ல, உலகமே மிகப்பெரிய, எதிர்பாராத ஊரடங்குகளில் ஒன்றை எதிர்கொண்டு வருகிறது. அதோடு பசி, வைரஸ் தொற்று, நிலையற்ற எதிர்காலம் குறித்த பயத்தினால் பணியாற்றும் இடத்தில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்ற கோடிக்கணக்கான தொழிலாளர்களையும் பார்க்க நேரிட்டுள்ளது. 

 

    இந்த கருத்துக்கணிப்பு படி, முதலீட்டாளர்கள் நின்றுபோன தங்களது பணிகளை மீண்டும் தொடங்கப் பெரும் தடையாக இருக்கப் போவது குறைந்த வட்டி விகிதத்தில் தேவையான அளவுக்கு நிதி கிடைப்பதுதான். பணியை விட்டு சொந்த ஊருக்குச் சென்ற தொழிலாளர்களின் திறன்களோடு பொருந்தும் வேலையாட்களைக் கண்டறிவதும், தேவையான மூலப்பொருட்கள், எந்திரங்களை பணி நடக்குமிடத்தில் கொள்முதல் செய்வதும் அதற்கடுத்த தடைகளாக இருக்கப் போகின்றன. தேசிய அளவிலான ஊரடங்கு, விநியோகச் சங்கிலித் தொடரை முழுக்க நலிவடைய வைத்துள்ளது. மீண்டும் பழைய நிலை தொடர சில காலமாகும். திட்டப்பணிகள் நடக்கும் உலகில் இதர மூன்று கூறுகளான கட்டமைப்பாளர்கள், ஆலோசகர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் தங்கள் கைவசமிருக்கும் திட்டங்களை பூர்த்தி செய்து, தற்போதைய வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பதற்கே உடனடி முக்கியத்துவம் தரப் போவதாகக் கூறியிருக்கின்றனர். 

 

    இந்த கருத்துக்கணிப்புயில் பங்கேற்றவர்கள், கோவிட்-19 காலகட்டத்துக்குப் பிறகும் ‘வீட்டிலிருந்து பணி’ எனும் கலாசாரம் தொடருமென்று எத்ர்பார்க்கின்றனர். அதனால், நீண்ட காலத்துக்கு வீடுகளுக்கான (பெரிய வீடுகள்) தேவை இருக்குமென்றும் கருதுகின்றனர். அதேநேரத்தில், வணிக இடங்களுக்கான தேவைகளில் சில மாற்றங்கள் இருக்கும் என்று நினைக்கின்றனர். பெரிய நிறுவனங்கள் ஒரு தலைமை அலுவலகத்துக்குப் பதிலாக, பயணம் செய்யும் நேரத்தைக் குறைத்து புதிய நியமங்களுடன் கூடிய பணிக் கலாசாரத்தைப் பின்பற்றும் வகையில் நிறைய சிறு அலுவலகங்களைத் தொடங்கித் தங்களது அலுவலகக் கட்டமைப்பை மாற்றலாம்.

 

    இந்தியாவுக்கான நன்மைகள் என்ற கேள்வியைப் பொறுத்தவரை, அப்படி எதுவும் இல்லை என்று 27.9% பங்கேற்பாளர்கள் கருத்துக்கணிப்புயில் கருத்து தெரிவித்திருக்கின்றனர். ஏனென்றால், தற்போதிருக்கும் நொடிந்துபோன நிலையில் இருந்து பொருளாதாரம் மீண்டெழ குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாவது ஆகும். மேலும் சீனாவைப் போன்று உயர் வகுப்பு கட்டமைப்பு, தாராளவாத தொழிலாளர் சட்டங்கள், தொழில்துறைக்கு மிகவும் அனுகூலமான கொள்கைகள் இந்தியாவில் இல்லை என்று கருதுகின்றனர். அதே நேரத்தில், மீதமுள்ள 69 சதவீதம் பேரும் கோவிட்-19 காரணமாக மருந்துப் பொருட்கள், மருத்துவ சாதனங்கள், ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல் உள்ளிட்ட சில துறைகளில் இந்தியா வெற்றியாளராக உருவெடுக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருக்கின்றனர். 

 

    பொருளாதாரத்தைப் புனரமைக்க, நிதி மற்றும் பண நடவடிக்கைகள் இரண்டையும் உள்ளடக்கி இந்திய அரசு ரூ.20,00,000 கோடி பொருளாதாரச் சலுகைகளை வழங்கியுள்ளது. விவசாயம், சுரங்கம், மின்சார விநியோகம், சுகாதாரம், கல்வித் துறைகளில் மரபை மீறும்விதமாகப் பல சீர்திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. நீண்டகாலமாகத் தாமதமாகும் தொழிலாளர் சீர்திருத்த நடவடிக்கைகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தற்போதைய பொருளாதார நசிவினை எவ்வாறு தணிக்கப் போகின்றன, வளர்ச்சிப்பாதையில் இந்தியாவை மீண்டும் நிலைநிறுத்தப் போகின்றன என்பதெல்லாம் திட்டங்களைச் சரியான நேரத்தில் பயனுள்ள வகையில் செயல்படுத்துவதைப் பொறுத்தும், உள்நாட்டுத் தேவைகளில் மறுமலர்ச்சி உருவாவதைப் பொறுத்தும் அமையும்.

 

நோய்த்தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் திட்டங்கள்!

    ப்ராஜக்ட்ஸ் டுடே கருத்துக்கணிப்பு படி, 2020 மே 31 அன்றைய நிலவரப்படி சிவப்பு மண்டலத்திலுள்ள 130 மாவட்டங்களில் 108-ல் திட்ட முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ரூ. 51,07,831 கோடியை உள்ளடக்கிய 29,255 திட்டங்கள் இருந்தன. அவற்றில், 21,11,985 கோடி மதிப்புள்ள 8,917 திட்டங்கள் வெவ்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், தற்போது தேசிய அளவிலான ஊரடங்கு காரணமாக அவையனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டங்களில் 62.9% அரசு நிறுவனங்களுக்குச் சொந்தமானது, மீதமுள்ள 37.1% தனியார் நிறுவனங்களுக்கு உரியது. 

 

    நோய்த்தொற்று அதிகமுள்ள மாவட்டங்களை பொறுத்தவரை, இந்தியாவிலேயே மும்பை மற்றும் மும்பை புறநகரில் மட்டும் செயல்பாட்டிலுள்ள மொத்த திட்டங்களில் 12.5 சதவீதம் உள்ளன. வைரஸ் பாதிப்புக்குள்ளான மக்கள் மற்றும் இறப்பு விகிதம் அதிகமுள்ள மாவட்டங்களிலும் மும்பையே முன்னணியில் உள்ளது.  

 

V.BALAMURUGAN 9381811222
Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்
http://arasumalar.com%20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *