காவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட ஐஸ் அவுஸ், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் அபிராமபுரம் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட ஐஸ் அவுஸ், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் அபிராமபுரம் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர். திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப. அவர்கள் 31.05.2020 அன்று காலை கொரோனா பாதிப்பு அடைந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள, மயிலாப்பூர் காவல் மாவட்டம், D-3 ஐஸ் அவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.ஆர்.பிள்ளை தெரு மற்றும் E-4 அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட KVB கார்டன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். மேலும், அங்கு பொதுமக்களிடம் கொரோனா தொற்று குறித்து எடுத்துரைத்து காவல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். உடன் கிழக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.ர.சுதாகர்,இ.கா.ப., மயிலாப்பூர் துணை ஆணையாளர் திரு.தேஷ்முக் சேகர் சஞ்சய்,இ.கா.ப., உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் இருந்தனர்.

பின்னர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், திருவல்லிக்கேணி காவல் மாவட்டம், F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெக்ஸ் தெருவில் ஆய்வு செய்து அங்கு பணியிலிருந்த காவல் ஆளிநர்களிடம் குறைகள் கேட்டறிந்து, கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்புடன் பணிபுரியுமாறு அறிவுரைகள் கூறினார். இந்நிகழ்வின்போது, கிழக்கு மண்டல இணை ஆணையாளர் திரு.ர.சுதாகர்,இ.கா.ப., திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் திரு.ஜி.தர்மராஜன்,இ.கா.ப., உதவி ஆணையாளர் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related posts

Leave a Comment