ஒரே நாளில் 7 பிரபலமான கடைகள் பூட்டி சீல்

 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் அரசின் விதிமுறைகளை மீறி ஏசி பயன்படுத்திய பிரபலமான 7 கடைகளை வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.

செங்கல்பட்டு மாவட்டம் கொரோனா வைரஸ் பரவலில் தற்போது சென்னைக்கு அடுத்து மாநிலத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது.இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் நகராட்சி பகுதிகளில் பல கடைகள் அரசின் வழிகாட்டு முறையை கடைப்பிடிக்காமல் செயல்படுவதாக மாவட்ட வருவாய் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்று மாவட்ட வருவாய் அதிகாரிகள்,நகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சோதணை நடத்தினா்.மேற்கு தாம்பரம் முடிச்சூா் சாலையில் உள்ள பிரபலமான தனியாா் டிப்பாா்ட்மெண்ட் ஸ்டோா்(மோா்),தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள திருமண அழைப்பிதழ்கள் நிலையம்,பா்ணிச்சா்,வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை கடைகள்(கிரியாஸ்) என்று மொத்தம் 7 வியாபார நிறுவனங்கள் அரசு நிபந்தணைகளை மீறி,குளிா்சாதன வசதிகளுடன் இயங்கின.அதோடு வாடிக்கையாளா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல்,மாஸ்க்குகளும் அணியாமல் இருந்தனா்.இதையடுத்து அதிகாரிகள் அந்த 7 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனா்.அதோடு கடைகளின் நிா்வாகிகள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.தாம்பரத்தில் ஒரே நாளில் 7 பிரபலமான கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

Leave a Comment