காரமடையில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் நிவாரண உதவி பொருட்கள்

ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் நிவாரண உதவி பொருட்கள்

கொரனா வைரஸ் தொற்று நோய் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதற்கு தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் ஒன்றிணைவோம் வா எனும் திட்டத்தை ஆரம்பித்து உள்ளார். இதனால் பெரும்பாலான மக்கள் பயனைடைந்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக காரமடை பகுதியில் நீலகிரி மாவட்ட மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆணைக்கிணங்க நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரமடை பேரூராட்சியில் உள்ள முடிதிருத்தும் தொழிலாளிகள் சலவைத் தொழிலாளிகள், மகளிர் அழகு நிபுணர்கள், வாகன ஓட்டுனர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், நடைபாதை வியாபாரிகள் உட்பட 700க்கும் மேற்பட்டோருக்கு கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் தன் சொந்த நிதியிலிருந்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு காரமடை பேரூர் கழக செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். முடிதிருத்தும் தொழிலாளர்கள் சார்பாக பழனிச்சாமி, சலவைத் தொழிலாளர் சுந்தர்ராஜ்,டெம்போ ஓட்டுனர் செந்தில்குமார், சம்பத் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் கே. எஸ். செந்தில்முருகன் அன்வர் பாஷா, வி. ஆர் கோபால் அரவராஜ், வேலுச்சாமி, நாராயணன் மற்றும் கழக உடன்பிறப்புகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment