பத்திரிகைகள் மீது அரசு தொடரப்பட்ட பல்வேறு அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

21/05/2020-
சென்னை: பத்திரிகைகள் மீது அரசு தொடரப்பட்ட பல்வேறு அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு காலகட்டத்தில் அரசுக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக ஊடகங்கள், பத்திரிகைகள் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, பத்திரிகைகளின் கருத்து சுதந்திரத்தை நசுக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அவதூறு தண்டனை சட்டத்தை இந்த அரசு கடைபிடித்து வருகிறது. அவதூறு வழக்குகளால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை தொடர்ந்து, பத்திரிகைகள், ஊடகங்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related posts

Leave a Comment