கரூரில் 2-வது முறையாக கொரோனா நிவாரணமாக காய்கறி தொகுப்பினை முதற்கட்டமாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.

கரூரில் 2-வது முறையாக கொரோனா நிவாரணமாக காய்கறி தொகுப்பினை முதற்கட்டமாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வழங்கினார்.
கொரனோ வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக 144-தடை உத்தரவு பிறபிக்கப்பட்டு அமுலில் உள்ளதால் வருவாய் ஆதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு கரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 3-லட்சம் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட சுமார் 500-மதிப்புள்ள உணவு பொருட்களை தனது சொந்த நிதியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஏற்கனவே வழங்கி முடித்து உள்ளார். தற்போது இரண்டாவது முறையாக கரூர் நகராட்சிக்குட்பட்ட 47 வார்டுகளுக்கும் கொரோனா நிவாரணமாக காய்கறி தொகுப்பினை முதற்கட்டமாக கோதூர் பகுதியில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி, முட்டைகோஸ், வெண்டைக்காய் உள்ளிட்ட 5-விதமான காய்கறிகளை தலா ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 5-கிலோ கொண்ட காய்கறி தொகுப்பை வழங்கும் நிகழ்ச்சியை இன்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்  பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். இதே போல் கரூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தனது சொந்த நிதியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் நேரடியாக சென்று வழங்கினார். காய்கறிகளை பெற்று கொண்ட பொதுமக்கள் அமைச்சருக்கு தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர்.

Related posts

Leave a Comment