பார்வை குறைபாடு உடையவர்கள் ஸ்மார்ட்போன்களை எளிதாகப் பயன்படுத்தும் வகையிலான செயலியை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி அறிமுகம் செய்துள்ளார்.
பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் நவீன ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள்இருக்கின்றன. இதை சரிசெய்யும் முயற்சியாக புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு ‘கீ4 கீபோர்டு’ என்ற புதியசெயலியை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் வெ.கிருஷ்ணமூர்த்தி வடிவமைத்துள்ளார். இதன்அறிமுக விழா சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சியில் பேராசிரியர் கிருஷ்ண மூர்த்தி பேசியதாவது:உலகம் முழுவதும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் சுமார் 4 கோடி பேர் வரை உள்ளனர்.
இந்தியாவில் 80 லட்சம் பேர் இருக்கின்றனர். அவர்களுக்கு ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவது இன்றளவும் பெரிய சவாலாகவே இருக்கிறது. தொடுதிரையை துரிதமாகப் பயன்படுத்த முடியாமலும், தவறுகள் அதிகம் ஏற்படுவதாலும் பலரும் சாதராண செல்போன்களையே உபயோகப்படுத்துகின்றனர். இதை மாற்றும் விதமாக ‘கீ4 கீபோர்டு’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
விரைவாக செய்து முடிக்கலாம்
இதன்மூலம் பார்வைத் திறன் குறைபாடுள்ளவர்கள் அனைத்து செல்போன் செயல் பாடுகளையும் எளிமையாகவும், விரைவாகவும் செய்து முடிக்கலாம். அதற்கு ஏதுவாக திரையில் ஒரு இன்ச் அளவுக்கு பெரிதாக 4 பொத்தான்கள் இருக்கும். இதன்மூலம் எல்லா செயல்பாடுகளையும் செய்யும்அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பெரிய வாக்கியங்களைக் கூட எளிதாக எழுத முடியும். மற்றபடி ஸ்மார்ட்போனில் உள்ள இதர வசதிகளும் இருக்கும்.
ரூ.70 கட்டணம்
இதை ப்ளே ஸ்டோரில் சென்று ‘k4 keyboard’ என டைப் செய்து இன்று (ஜூன் 9) முதல் பதிவிறக்கம் செய்யலாம். முதல்கட்டமாக தமிழ், ஆங்கிலம் பிரெஞ்சு உள்ளிட்ட 14 மொழிகளில் பயன்படுத்துவதற்கான மென்பொருள் வசதி செய்யப் பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக (6 மாதத்துக்கு) ரூ.70 செலுத்த வேண்டும். அதேநேரம் இந்தச் செயலியை வாங்கும்முன் இலவசமாகப் பயன்படுத்தி திருப்தி இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கான வசதிகள் உள்ளன. வரும்காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் தேர்வுகளை இந்தச் செயலி மூலமே மேற்கொள்ளும் அளவுக்கு இதில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
https://play.google.com/store/apps/details?id=com.tamilnewslivetv.tamilnewspaper