கரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் 480 புலம்பெயர் தமிழர் குடும்பங்களுக்கு 2 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் 480 புலம்பெயர் தமிழர் குடும்பங்களுக்கு 2 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கரூரை அடுத்த ராயனூர் பகுதியில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் 480 புலம்பெயர் தமிழர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்கள் வேலை இல்லாத காரணத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக ராயனூர் அகதிகள் முகாமில் வாழ்ந்து வரும் 480 புலம்பெயர் தமிழர்களின் குடும்பங்களுக்கு சுமார் 2 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை நிவாரணமாக இன்று வழங்கினர். இதில் மருத்துவர் பாசறை செயலாளர் கருப்பையா, மாவட்ட பொருளாளர் ராகவன், மண்டல செயலாளர் ரமேஷ் இளந்தமிழன்,  தொகுதி தலைவர் இசக்கி, தொகுதி செயலாளர் கார்த்திக், அரவை தொகுதி தலைவர் செல்வம், தொகுதி பொறுப்பாளர்கள் இளந்தமிழன், தினேஷ், சரவணன், பாபு, விஜய், ரூபன், சேகர், கௌதமன், தேரிராஜ்  ஆகியோர் கலந்துகொண்டு இரண்டரை டன் அளவுள்ள உணவுப் பொருட்களை வழங்கினர்.

Related posts

Leave a Comment