Home

கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றிலிருந்து பூரண குணமடைந்த கடைசி நபரை வழியனுப்பி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றிலிருந்து பூரண குணமடைந்த கடைசி நபரை வழியனுப்பி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கரூர் மண்டலத்தைச் சேர்ந்த  கரூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் கொரோனா சிறப்பு சிகிச்சைப்பிரிவில் தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 42 நபர்கள்  நோய் தொற்று காரணமாக  பாதிக்கப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,  தற்போது சிகிச்சை பெற்று வந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கடைசி நபரான பெண் பூரண குணம் அடைந்ததை அடுத்து தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை  முதல்வர் ரோஸி வெண்ணிலா  தலைமையிலான  மருத்துவ குழுவினர்கள், செவிலியர்கள்  மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும்  போக்குவரத்து துறை அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர்  தனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர்  அன்பழகன்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாண்டியராஜன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். தற்போது கரூர் மாவட்டம் கொரோனா நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.
தற்போது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 6 நபர்களும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 8 நபர்களும் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
V.BALAMURUGAN 9381811222
Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்
http://arasumalar.com%20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *