Home

கரூரில் 440க்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் குடும்பங்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கரூரில் 440க்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் குடும்பங்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கரூரை அடுத்த ராயனூர் பகுதியில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில் 440க்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்களின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்கள் வேலை இல்லாத காரணத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக ராயனூர் அகதிகள் முகாமில் வாழ்ந்து வரும் 440க்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்களின் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களை நிவாரணமாக இன்று வழங்கப்பட்டது. இதில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமை ஏற்று நிவாரணப் பொருட்களை வழங்கினார். வழக்கறிஞர் பாசறை செயலாளர் பாலாஜி காந்தி, வழக்கறிஞர் பார்த்திபன், சரவணன், சேகர், மாணவர் பாசறையை சேர்ந்த சூர்யா, ஆதவன், ரூபன், இளமாறன் ஆகியோர் உடன் இருந்தனர். இன்று வழங்கப்பட்ட நிவாரண பொருட்களின் மதிப்பு சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என வழக்கறிஞர் நன்மாறன் தெரிவித்தார்.
V.BALAMURUGAN 9381811222
Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்
http://arasumalar.com%20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *