கண்காணிப்பு பணியில் ஊர்காவல் படை தீவிரம்
உலகையே அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் தடுக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மருத்துவர், திரு.அருண் சக்திகுமார் அவர்களின் உத்தரவின் பேரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு, தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை கண்காணிக்கும் பொருப்பில், கண்காணித்தல் மற்றும் பொதுமக்களை விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுதல் போன்றவற்றில் 250 க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஊர்காவல் படையினரின் பணிகளை மேற்பார்வையிட்டு ஆய்வுசெய்த ஊர் காவல்படை வட்டார தளபதி பேராசிரியர் முனைவர் S.அழகுமணியன் மற்றும் துணை வட்டார தளபதி கூறுகையில் இந்திய தேசம் ஒருங்கிணைந்து கொரோனாவை எதிர்கொள்ளும் இயக்கத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஊர்க்காவல் படையினரும், காவல்துறையினரும் இணைந்து தன்னலம் கருதாமல் பொது மக்களின் நலன் மட்டும் கருதி பணியில் ஈடுபட்டனர் என்றனர். மக்கள் நலனில் எங்கள் எங்களை அர்ப்பணித்து செயல்படுவது மிகவும் கடமையாகக் கருதுகிறோம் என்று ஊர் காவல்படை நண்பர்கள் நெஞ்சம் நிமிர்ந்து கூறுகின்றனர்.