சத்தரை ஊராட்சியில் கொரோனா வைரஸ் காரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் 1000 மற்றும் இலவச பொருட்கள் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் பொது மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூபாய் ஆயிரமும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை,சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதைத்தொடர்ந்து நேற்று திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சத்தரை கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 மற்றும் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடம்பத்தூர் ஒன்று குழு தலைவர் சுஜாதா சுதாகர் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூபாய் 1000 மற்றும் மளிகை பொருட்கள் காய்கறி பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி வெங்கடேசன், துணைத் தலைவர் வைடூரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராம்குமார்,லதா உட்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் கிராமத்தில் புரட்சி பாரதம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் மணவூர் மகா தலைமையில் வீடு வீடாகச் சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ரூபாய் 1000 மற்றும் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்கள். அவருடனான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்,

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.