*எஸ்,முருகேசன்*

2005ன் புதிய இந்து வாரிசுரிமை திருத்தச் சட்டம்
புதிய இந்து வாரிசுரிமை திருத்த சட்டம் 2005

இந்த 2005 சட்டப்படி, இந்து பூர்வீகச் சொத்துக்களில், மகன்களைப் போலவே, மகள்களுக்கும் சம பங்கு கொடுக்க வேண்டும் என்று புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டமானது, 9.9.2005 முதல் அமலில் வருகிறது. இந்த திருத்த சட்டத்தில், இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956ன் பிரிவு 6ஐ (அதுதான் பூர்வீகச் சொத்துக்களுக்கு யார் யார் வாரிசு என்று சொல்வது) முழுவதுமாக மாற்றி எழுதப்பட்டுள்ளது.
2005ன் புதிய பிரிவு 6ன்படி, பூர்வீகச் சொத்தில், மகன்களைப் போலவே, மகள்களுக்கும் சரி சம உரிமை உண்டு என்று சொல்லி இருக்கிறது.
எஸ்,முருகேசன்
அப்படியென்றால், ஏற்கனவே சொத்தை பாகம் பிரித்துக் கொண்ட மகன்கள், அந்த சொத்தை மகள்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. அதற்கு விளக்கமாக, அந்த சட்டம் 2005ல் வருவதற்கு முன்னர், இதை ஆரம்பித்த காலமான, 20.12.2014 தேதியை கெடு தேதியாக வைத்துக் கொண்டார்கள். அதன்படி, 20.12.2014க்கு முன்னர் பிரித்துக் கொண்ட (அதாவது மகன்களுக்குள் மட்டும் பிரித்துக் கொண்ட) சொத்துக்களின் பாகப்பிரிவினைகளை இது தொந்தரவு செய்யாது. அதற்கு பின்னர் பாகம் பிரித்திருந்தாலும், அந்த சொத்தில் மகள்களுக்கும் பாகம் கொடுக்க வேண்டும். அது இல்லாமல், ஏற்கனவே பாகம் கேட்டு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கிறதே, அதை என்ன செய்வது என்ற கேள்வியும் கூடவே வருகிறது. அதற்கும் முடிவாக, பாக வழக்குகள் போட்டிருந்தாலும், அதில் பைனல் டிகிரி கொடுத்திருந்தால் இந்த புது சட்டம் தலையிடாது. மற்றபடி அந்த வழக்கு எந்த கோர்ட்டில் இருந்தாலும், அதிலும் மகள்களுக்கு சரிசம பங்கு உண்டு என்றும், அவ்வாறு அந்த வழக்கில் கேட்காமல் இருந்தாலும், இப்போது இந்த புது சட்டப்படி பங்கு கேட்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதில் இன்னொரு குழப்பத்தை, பல வழக்குகளில், பல கோர்ட்டுகளில் வாதமாக வைத்துள்ளார்கள். அதன்படி, ஒரு இந்து கோபார்சனர் இறந்து விட்டால் (பூர்வீகச் சொத்தின் பங்குதாரர்), அந்த சொத்தின் உரிமை அப்போதே அந்த உரிமை 1956 சட்டப்படி மகன்களை வந்து அடைந்து விடுமே என்றும் அப்படிப்பட்ட உரிமை பாகம் பிரித்துக் கொள்ளும் வரை காத்திருக்காதே என்றும், எனவே ஏற்கனவே அந்தகைய உரிமை வந்துவிட்ட பின்னர், அதை எப்படி மறுபடியும் பிரித்து, மகள்களுக்கு கொடுக்க முடியும். “வந்துவிட்ட உரிமையை திரும்ப கேட்க முடியாது” என்பதுதானே இயற்கை நியதியும் சட்டமும் கூட. அப்படி இருக்கும்போது உரிமை மாறி வந்த சொத்தில் எப்படி மகள்களுக்கு பங்கு கொடுக்க முடியும் என்ற பிரச்சனையை கிளப்பி விட்டுள்ளார்கள்.

இந்த வாதத்துக்கு எதிராக, இந்த புதிய சட்டமான 2005 திருத்த சட்டப்படி, மகள்கள் இந்த குடும்பத்தில் பிறந்த உடனேயே அவர்களுக்கு பங்கு உறுதி செய்யப்படுகிறது என்றுதானே இந்த 2005 சட்டம் சொல்கிறது. அப்படிப் பார்த்தால், 1956 சட்டம் வந்த பின்னர் பிறந்த எல்லா மகள்களுக்கும் பூர்வீகச் சொத்தில் மகன்களைப் போலவே பங்கு கொடுக்க வேண்டும் என்றுதானே 2005 சட்டம் சொல்கிறது. 20.12.2004 வரை பாகம் பிரிக்காத சொத்துக்களில் பெண்களும் பிறப்பால் ஒரு பங்குதாரார் என்று தானே சொல்கிறது. எனவே அவர்களுக்கு பிறப்பால்தானே பங்கு உண்டு. எனவே பாகம் பிரியாத சொத்துக்களில் பெண்களுக்கும் (மகள்களுக்கும்) மகன்களைப் போலவே பங்கு பெற உரிமை உண்டு என்கின்றனர்.
இப்போது இந்த பிரச்சனை, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு புஷ்பலதா வழக்கு என்று பெயர்.

அதன் தீர்ப்பைப் பொறுத்து இந்த நிலையில் என்ன மாறம் வரும் என்று பின்னர் தெரியவரும்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.