தென் சென்னை
தெற்கு மாவட்ட கழக செயலாளரும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான
திரு.விருகை V.N.ரவி அவர்கள் தொகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி மற்றும் கொரோனா விழிப்புணர்வை மக்கள் கடைபிடிக்கிறார்களா என்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கோயம்பேடு பஸ் நிலையம், மார்க்கெட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சாலையில் சுற்றி திரிந்துகொண்டு இருந்த ஆதரவற்றவர்கள் மற்றும் வெளிமாவட்டத்தை சார்ந்த
மக்களை (சுமார் 200 பேர்) விருகம்பாக்கம் சமூக கூடத்தில் தங்கவைத்து அவர்களுக்கு உணவு,உடைகள் மற்றும் முக கவசங்கள் வழங்கி கொரோனா நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி 14.4.2020 வரை இங்கேயே தங்கி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்.
இந்த பணியை பார்த்த
பொதுமக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.விருகை V.N.ரவி அவர்களை வெகுவாக பாராட்டினர்.
தகவல்:
தென் சென்னை தெற்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு.