தமிழகத்தில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும் என்று பேரவையில் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அறிவித்த 144 தடை உத்தரவு இன்று (24/03/2020) மாலை 06.00 மணி முதல் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வின் கடைசி நாளான இன்று (24/03/2020) பேரவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, “தமிழகத்தில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும். கரோனா நிவாரணத்திற்காக ரூபாய் 3,250 கோடி ஒதுக்கீடு. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும்.