கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனை கட்டும் ரிலையன்ஸ் – 2 வாரத்துக்குள் புதிய மருத்துவமனை கட்ட திட்டம்

கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனை கட்டும் ரிலையன்ஸ் – 2 வாரத்துக்குள் புதிய மருத்துவமனை கட்ட திட்டம்*_

மும்பையில், 2 வாரத்துக்குள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை கட்ட முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது.

மும்பை மாநகராட்சியுடன் இணைந்து,100 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய மருத்துவமனை கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்புவர்களை தனிமைப்படுத்தும் சிறப்பு முகாம்களை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அமைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

முகக்கவச உற்பத்தி, அவசர ஊர்திகளுக்கான இலவச எரிபொருள், இலவச உணவு உள்ளிட்ட பணிகளை செய்ய உள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

Leave a Comment