தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியத்தில் 89 திமுக
கிளைக்கழகங்கள் போட்டியின்றி தேர்வு.
தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்ற கழகத்தின் 15 ஆவது அமைப்பு தேர்தல் நடைபெற்று வருகின்றன. அதன் முதற்கட்டமாக , ஊர்க்கிளை, உட்கிளை தேர்தல் நடைபெறுகிறது. தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள 25 ஊராட்சிகளில், 89 ஊர்க்கிளைகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட னர். ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியதேர்தல் நடத்தும் ஆணையாளராக பணியாற்றிய திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் புதூர் இராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஆறுமுகம், மற்றும் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளரும், ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணைப்பெருந்தலைவருமான காசி விஸ்வநாதன் ஆகியோர் இன்று காலை தூத்துக்குடி கலைஞர் அரங்கில், மாவட்ட திமுக செயலாளர் திருமதி பி.கீதாஜீவன் மற்றும் தலைமைக்கழக தேர்தல் பொறுப்பாளர் பாலவாக்கம் சோமு ஆகியோர் வசம் தேர்தல் சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஒப்படைத்தனர்.