முதல்முறையாக சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயரில் போலி

சென்னை: சென்னை காவல் துறையில் முதல்முறையாக சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயரில் போலி கணக்கு தொடங்கி பாலியல் தொந்தரவு செய்து வந்த இன்ஜினியரை சைபர் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.பிரபலங்களின் பெயரில் போலியான கணக்கு தொடங்கி அதன் மூலம் அவர்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து சமூகவலைதளத்தில் பரப்பிவிடுவதாக பாதிக்கப்பட்ட 7 பெண்கள் கடந்த மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அதன்படி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கொம்மனாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த இன்ஜினியர் விக்னேஷ் (23) என்பவர் இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்தி இளம்பெண்களின் புகைப்படங்களை பெற்று மார்பிங் செய்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்தது உறுதியானது. அதைதொடர்ந்து சைபர் க்ரைம் துணை கமிஷனர் நாகஜோதி உத்தரவுப்படி சைபர் க்ரைம் போலீசார் கடந்த மாதம் 15ம் தேதி விக்னேஷை கைது செய்தனர். இந்நிலையில் போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி சென்னை மாநகர காவல் துறையில் முதல்முறையாக தொடர்ந்து சைபர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த இன்ஜினியர் விக்னேஷை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சைபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்

Related posts

Leave a Comment