சென்னை பாடியில் பரபரப்பு தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை பாடியில் பரபரப்பு ஒரே புடவையில் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை

பாடியில் பூட்டிய வீட்டில் ஒரே புடவையில் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர் இதற்குக் காரணம் குழந்தை இல்லாதது தான் காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அம்பத்தூர் அடுத்த பாடி மகாத்மா காந்தி மெயின்ரோட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சந்திரசேகர் வயது 46 தனியார் கம்பெனி ஊழியர் இவரது மனைவி மஞ்சுளா 35 இவர்களுக்கு குழந்தை இல்லை
ஒரு வருடமாக இந்த வீட்டில் வசித்து வருகின்றனர் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் நகரி
சந்திரசேகரன் மஞ்சுளாவும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் இடம் சரியாக பேசுவதில்லை இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை இன்று காலையில் திடீரென அவர்களது வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் T -3 கொரட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் S I ரமேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் வீட்டில் கதவை தட்டியபோது திறக்கவில்லை இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர் மின்விசிறியில் ஒரே புடவையில் சந்திரசேகரும் மஞ்சுளாவும் தூக்கில் பிணமாக கிடந்தனர் உடலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் இதையடுத்து இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சம்பவம் குறித்து வீட்டு உரிமையாளர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,

Related posts

Leave a Comment