ட்ரைசைக்ளாஸோல், புப்ரோஃபெசின் ஆகியவற்றுக்கு 2020 பூச்சிக்கொல்லி தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான நெல் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட உள்ளது. 2020 ஜனவரி 31-ம் தேதி (S.O.531-E) வெளியான செய்தியில் பூச்சிக்கொல்லி தடை உத்தரவு பற்றி வெளியிடப்பட்டுள்ளது.

 

மனிதர்களின் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படும் என கருதி ட்ரைசைக்ளாஸோல், புப்ரோஃபெசின் ஆகிய பூச்சிக்கொல்லிகளை விவசாயிகள் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. சர்வதேச அளவில், வேளாண் துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த பூச்சிக்கொல்லிகள் அதிக அளவில் உதவியாக இருப்பதாக மற்றொரு புறம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஐரோப்பிய கண்டம் மற்றும் பிற இடங்களில், இந்த இரண்டு பொருட்களை பயன்படுத்தலாமா வேண்டாமா என தொடர்ந்து ஆராய்ச்சி செய்யப்பட்டுவருகிறது.

 

வேளாண் துறையில் பயன்படுத்தப்பட்டுவரும் இந்த பூச்சிக்கொல்லிகளினால் விவசாயிகள் பலன் அடைந்து வருகின்றனர். திடீரென இந்த பூச்சிக்கொல்லிகளை தடைசெய்வதற்கு பதிலாக, குறிப்பிடப்பட்ட அளவு மட்டுமே விவசாயிகள் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்க வேண்டும். 

 

மேலும், இந்த பூச்சிக்கொல்லிகளின் தடையினால் ஏற்படும் விளையவுகளை பற்றி ஆராய மத்திய அரசு தவறிவிட்டது. (உதாரணமாக, பூச்சிக்கொல்லிகளின் விற்பனை கருப்பு சந்தையில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன)

 

இயற்கை சீற்றங்கள் போல வெள்ளம், தண்ணீர் பற்றாக்குறை, கடன், தரமற்ற பூச்சிக்கொல்லி பயன்பாடு போன்ற எண்ணற்ற பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இந்த பிரச்னைகளை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியம். 

 

இந்த கோரிக்கைகளை அரசு கவனத்தில் எடுத்து கொண்டு, இந்திய விவசாயிகளின் நல்வாழ்வுக்கு தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும், விவசாய நடைமுறையை முழுமையாக ஆராய்ச்சி செய்து தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், வெளி பயனாளிகளின் அழுத்தத்தால் பூச்சிக்கொல்லி தடை செய்வதினால், விவசாயிகள் பாதிப்படைவது உறுதி. 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *