தூத்துக்குடி மாவட்டத்தில்
தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பாக நடைபெற்று வருகிற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப. அவர்கள் பதக்கமும், காசோலையும் வழங்கி பாராட்டினார்.தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுப்போட்டிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்த 2019-2020 கல்வி ஆண்டில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு மாநில அளவிலான டேக்வாண்டோ, ஸ்குவாஷ் மற்றும் கடற்கரை கையுந்து போட்டிகள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.இப்போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெற்று, அதில் வெற்றி பெற்ற சுமார் 1,500 மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி மற்றும் நேற்றும்(30.01.2020), இன்றும்(31.01.2020) தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த டேக்வாண்டோ போட்டியில் 14 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் 11 பேர் முதல் பரிசும், 11 பேர் இரண்டாவது பரிசும், 22 பேர் மூன்றாவது பரிசு பெற்றுள்ளனர்.19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான டேக்வாண்டோ போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப. அவர்கள் துவங்கி வைத்து 14 வயதுக்குட்பட்டவர்களுக்காண டேக்வாண்டோ போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த 44 மாணவர்களுக்கு பதக்கமும், காசோலையும் வழங்கி பாராட்டினார்.இப்பரிசு விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி. ஞானகெளரி அவர்கள் முன்னிலை வகித்தார். மாநிலம் முழுவதுமான பள்ளி மாணவ, மாணவிகள், தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.