தஞ்சையில் காவல்துறை இயக்குநர் அவர்கள் நேரில் ஆய்வு

05.02.2020ம் தேதியன்று தஞ்சாவூர் பெரியகோவில் திருக்குடமுழுக்கு விழா நடைபெறுவதையோட்டி¸ இன்று தமிழக காவல்துறை இயக்குநர் திரு. J.K. திரிபாதி¸ இ.கா.ப அவர்கள் தஞ்சை சென்று¸ விழாவிற்கு வரும் குழந்தைகள்¸ பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும்¸ பொதுமக்களுக்கு அதிகம் சிரமம் ஏற்படாதவாறு போக்குவரத்தினை ஒழுங்குபடுத்திடவும்¸ குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விபத்துக்கள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க¸ காவல் உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும் விபரங்களுக்கு “நம்ம தஞ்சை”(Namma Thanjai) என்னும் செயலியை பயன்படுத்தி விழாவிற்கான கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

 

#ThanjavurDistrictPolice #NammaThanjai #TNPolice #BrihadeeswararTemple #Kudamuluku #TruthAloneTriumphs

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.