*”ஸ்பிரிட்டட் யூத்ஸ்” கால்பந்து கழகம் சார்பில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டி : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்*

——————————————————–

“ஸ்பிரிட்டட் யூத்ஸ்” கால்பந்து கழகத்தின்
50 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அதன் சார்பில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்.

இன்று (18.01.2020) தூத்துக்குடி தருவை மைதானத்தில் “ஸ்பிரிட்டட் யூத்ஸ்” கால்பந்தாட்ட தூத்துக்குடி கிளப்பின் பொன்விழா ஆண்டு துவக்க விழா கால்பந்தாட்ட போட்டியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு ஸ்பிரிட்டட் கால்பந்தாட்ட கிளப்பின் அடையாளமான, அதன் லோகோவை, வெளியிட்டு கால்பந்தாட்ட குழுவினர் மற்றும் கால்பந்தாட்ட வீரர்களையும் ஊக்குவித்து சிறப்புரையாற்றினார்.

அதன்பின் கால்பந்தாட்ட வீரர்களை வாழ்த்தி, வெண்புறாவை பறக்க விட்டு கால்பந்தாட்ட விளையாட்டு போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கோல் போட்டு துவக்கி வைத்தார். பின் கால்பந்தாட்ட கிளப்பின் நினைவாக தருவை மைதானத்தின் முன்பு மரம் நட்டார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திரு. ஜேசையா வில்லவராயர், மாவட்ட விளையாட்டு அதிகாரி திரு. பேட்ரிக், கால்பந்தாட்ட கிளப் தலைவர் திரு. பிரின்ஸ்டன் பர்னாந்து, செயலாளர் திரு. மரின்டோ வி. ராயன், பொருளாளர் திரு. ஆரோக்கியராஜ், திரு. தாமஸ்பாலன், நிறுவனர் திரு. ஜெயராஜ், கிளப் உறுப்பினர்கள், கால்பந்தாட்ட வீரர்கள், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் திரு. ஜெயப்பிரகாஷ், முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் திரு. அன்ன ராஜ், வடபாகம் காவல் ஆய்வாளர் திரு. அருள், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி. வனிதா மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டனர்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published.