தர்பார் திரைப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியான தர்பார் திரைப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த போதிலும் சென்னை உள்பட பல நகரங்களில் வசூலில் பிரம்மாண்ட சாதனை செய்து வருகிறது.

அந்த வகையில் நேற்று முதல் நாள் வசூல் சென்னையில் மட்டும் இந்த படம் ரூபாய் 2.27 கோடி வசூல் செய்தது. தமிழகம் முழுக்க ஒரே நாளில் இந்த படம் ரூபாய் 34.5 கோடி வசூல் செய்திருந்தது. இந்நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின் படி இரண்டு நாட்களில் தர்பார் படம் தமிழகத்தில் மட்டும் 53 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. அதோடு கேரளா, ஆந்திரா, தெலங்கனா மற்றும் வட இந்திய மாநிலங்களில் இரண்டு நாட்கள் முடிவில் 38 கோடி ரூபாயும் வசூல் செய்து இந்தியா முழுதும் 69 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும் உலகம் முழுதும் 160+ கோடி ரூபாயை வசூல் செய்து அபார சாதனை அடைந்துள்ளது. இன்னும் தொடர்ந்து வார இறுதி நாட்கள் , மற்றும் பொங்காக்ல விடுமுறை உள்ளிட்டவரை கணித்து பார்த்தால் நிச்சயம் 400+ கோடி ரூபாய்களை தாண்டி வசூல் ஈட்டி மாபெரும் சாதனை குவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Related posts

Leave a Comment