திமுக, காங்கிரஸ் கூட்டணியில் பயங்கரவாதிகள் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்,பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட காவலர் வில்சன் குடும்பத்திற்கு1 கோடி ரூபாய் அளிக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. காவலர் கொல்லப்பட்டது குறித்து திமுக, காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவிக்காதது வேதனை அளிக்கிறது என அவர் தெரிவித்தார்.
திமுக,காங்கிரஸ் கூட்டணியில் பயங்கரவாதிகளும் கூட்டணி வைத்து இருக்கிறார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.