முதல் நாளில் மட்டும்* *சுமார் 50 கோடி ரூபாய் வசூல்

 

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள* *தர்பார் திரைப்படம் முதல் நாளில் மட்டும்* *சுமார் 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக* *தகவல்
*வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் தர்பார் படம் திரையிடப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான
இந்தப் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என வினியோகஸ்தர்கள் வட்டாரத்தில்
கூறுகின்றனர்.

அதில் தமிழகத்தில் 17 கோடி ரூபாயும், ஆந்திராவில் 7 புள்ளி 5 கோடி ரூபாயும் என இந்தியாவில் மட்டும் முதல் நாள் வசூல் 40 கோடி ரூபாயை
தொடும் என்று தெரிவிக்கின்றனர்.

இந்திய வசூலை தவிர்த்து அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், லண்டன் போன்ற வெளி நாடுகளின் வசூல் 15 கோடி
ரூபாய் வரை இருக்கும் என்று கணிக்கின்றனர்.

Related posts

Leave a Comment