திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் மார்ச் 1 பிறந்த நாளை முன்னிட்டு மாநில இளைஞரணி சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி மாநில அளவில் நடைபெற இருக்கிறது.

மாநில அளவில் கலந்துகொண்டு வெற்றி பெறுகிற அணிக்கு முதல் பரிசாக 5 லட்ச ரூபாயையும் தங்க கோப்பையும் இரண்டாம் பரிசாக மூன்று லட்ச ரூபாயும் மூன்றாம் பரிசாக இரண்டு லட்சம் ரூபாய் நான்காம் பரிசாக ஒரு லட்ச ரூபாயும் சிறந்த ஆட்டக்காரர்களுக்கான பரிசாக 50,000 ரூபாயும், வழங்க இருக்கிறார்கள்.

அதற்கு முன்பாக மாவட்ட அளவில் போட்டி நடக்கிறது அந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு 15,000 இரண்டாம் பரிசு 10,000 மூன்றாம் பரிசு ஐந்தாயிரம் வழங்கப்படும். இந்த போட்டியில் வெற்றி பெறுகிற அணி மண்டல அளவில் நடைபெறுகிற போட்டியில் கலந்துகொண்டு விளையாட வேண்டும் அதில் வெற்றி பெறும் அணிக்கு ரூ 25000 பரிசு வழங்கப்படும்

மண்டல அளவில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டு விளையாட வேண்டும் அந்த அணியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஏற்கனவே மேலே சொல்லப்பட்ட முதல் பரிசாக 5 லட்ச ரூபாய் தங்க கோப்பை வழங்கப்படும் மாநில அளவில் நடைபெறுகிற போட்டி தேதி பின்னர் அறிவிக்கப்படும் அதேபோன்று மண்டல அளவில் நடைபெறுகிற போட்டியும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்புகிற அணிகள் தங்கள் பெயரை

ஆயிரம் ரூபாய் பதிவு கட்டணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்

இதற்கான விண்ணப்பம் தென்காசியில் தெற்கு மாசி வீதியில் அமைந்துள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் கிடைக்கும்

தொடர்பு எண்

04633227790

முன் பதிவு செய்வதற்கான கடைசி நாள் 25.1.2020 ஆகும்

தொடர்புக்கு..9751916531
பூ ஆறுமுகசாமி
அமைப்பாளர்
மாவட்ட திமுக இளைஞரணி

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *