திமுகவினர் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக அதிமுக ஒன்றிய செயலாளர் உள்பட 5 பேர் கைது

 

கமுதி ஒன்றிய கவுன்சிலர்களை கடத்தியதாக திமுகவினர் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக அதிமுக ஒன்றிய செயலாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளாட்சி மறைமுக தேர்தலுக்காக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியக் கவுன்சிலர்களை திமுகவைச் சேர்ந்த போஸ், தேவக்கோட்டைக்கு கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதில் தேமுதிக கவுன்சிலர் அங்கு இருப்பதாக அவரை மீட்பதற்காக புதுக்குறிச்சிக்கு கமுதி அதிமுக ஒன்றியச் செயலாளர் காளிமுத்து தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர் தேவக்கோட்டை சென்று, திமுகவினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் அரிவாளால் வெட்டப்பட்டதில் திமுகவைச் சேர்ந்த போஸ் மற்றும் விஜய் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

பின்னர் போஸ் அளித்த புகாரின் பேரில் காளிமுத்து உள்பட 5 பேரை கைது செய்தனர்.

Related posts

Leave a Comment