திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பொத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்குப் கை உருளை சின்னத்தில் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற உள்ள வழக்கறிஞர் சுரேஷ் பொத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பொது மக்களை வீதி வீதியாக சென்று நன்றி தெரிவித்தார் அப்பொழுது இளைஞர்கள் மற்றும் நண்பர்கள் மிகவும் உற்சாகத்துடன் வரவேற்றனர் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பொத்தூர் தலைவர் வழக்கறிஞர் சுரேஷ் பின்பு அவர் செய்தியாளருக்கு பேட்டியளிக்கையில் நான் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட எங்கள் கிராம ஊராட்சி பொது மக்களுக்கு அரசு சலுகைகள் பெற்றுத் தருவேன் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பேன் மகளிர்களுக்கு சுயதொழில் செய்வதற்கு அரசு சலுகைகள் பெற்றுத் தருவேன் மகளிர்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் எங்கள் கிராம பொதுமக்களுக்கு எந்தப் பிரச்சனை என்றாலும் எந்த நேரத்திலும் நான் குரல் கொடுப்பேன் மற்றும் பொதுவாக இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாக உள்ளனர் இதுவரை எங்கள் கிராமத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததில்லை இனிமேலும் மதுவுக்கு அடிமை இல்லாத ஒழுக்கமான கிராமமாக எங்கள் கிராமத்தை வழி நடத்துவேன் என்று அவர் தெரிவித்தார்