வாகன சோதனையின்போது 300 கிலோ குட்கா மற்றும் வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் வாகன சோதனையின்போது 300 கிலோ குட்கா மற்றும் வாகனங்கள் பறிமுதல் 3 பேர் கைது.

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் mvm அரசு கல்லூரி மேம்பாலத்திற்கு கீழே திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார் வாகன சோதனை ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த ஆம்னி காரை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் காரில் சட்டவிரோதமாக குட்கா கடத்தி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் காரை முழுமையாக சோதனை மேற்கொண்டதில் காரில் 300 கிலோ குட்கா இருந்ததை பறிமுதல் செய்தனர். மேலும் குட்கா கடத்திய மோகன் கணேஷ்,மாரிமுத்து, லோகு துரைப்பாண்டி ஆகிய மூன்றுபேரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி கார் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் சட்டவிரோதமாக குட்காவை வாங்கி கடைகளுக்கு திண்டுக்கல் நகரில் உள்ள கடைகளில் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.

Related posts

Leave a Comment