மோதிரத்தை கண்டு பிடித்து கொடுத்த சிறுவனுக்கு பாராட்டு

நேர்மைக்கு பாராட்டுக்கள்

நாங்குநேரி பெரிய குளத்தில் குளிக்கச் சென்ற ஒன்பதாம் வகுப்பு சிறுவன் மோதிரத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி செல்வன் தெருவை சேர்ந்தவர் வானமாமலை. இவரது மகன் செல்வகுமார் (15). இவர் விஜயநாராயணத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று பள்ளி விடுமுறை என்பதால் நாங்குநேரி பெரிய குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்குள்ள படித்துறையில் சுமார் முக்கால் பவுன் மதிக்கக்கூடிய மோதிரம் ஒன்றை அவர் கண்டு எடுத்துள்ளார். பின்னர் நாங்குநேரி காவல் நிலையத்திற்கு வந்த அவர் அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சஜீவிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் பாராட்டினர்.

Related posts

Leave a Comment