ஜனநாயக மக்கள் எழுச்சி கழக திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் : தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன செய்தியில் கூறியதாவது .
கட்சியின் விதி முறைகளின் படி எனக்குள் அதிகாரத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்ட தலைவர் எம்.பி. முபாரக் அவர்களின் பரிந்துரையின் படி திண்டுக்கல் மாவட்டம் , மொழுக்கையன் தோட்டம், ரெங்கநாதபுரத்தை சேர்ந்த ஜார்ஜ் ஸ்டிபன் மாவட்ட துணை தலைவராகவும், இந்திரா நகர் புஷ்வனத்தை சேர்ந்த வேல் முருகன், மாவட்ட செயலாளராகவும், ஓய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்த செல்வம், மாவட்ட பொருளாளராகவும், நரிப்பாறை, பள்ளபட்டியை சேர்ந்த ஆசிக் மாவட்ட அமைப்பு செயலாளராவுகம், மேற்கு மரியநாத புரத்தை சேர்ந்த ஜஸ்டின் பிரபு, மாவட்ட துணை செயலாளராகவும்,ஆகிய ஐந்து பேரும் 26-12-2019 இன்று முதல் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்க பட்டுள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
பதவியின் தண்மையை உணர்ந்து இறையான்மைக்கு உட்பட்டு அணைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடுபட வேண்டும் மெனவும் உண்மையாக செயல்பட்டு கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் மென கேட்டு கொள்கிறேன் .
திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்க பட்டுள்ள அணைவருக்கும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.