கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அதன்படி, அறிவியல் பாடத்தில் 98.56% மாணாக்கர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
ஹைலைட்ஸ்
- மாணவர்கள் இதனை http://www.tnresults.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
- பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
கடந்த மார்ச் 14ம் தேதி முதல் 29ம் தேதி வரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் ஏப்ரல் 29ம்தேதி (இன்று) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் சரியாக இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.