காவிரியில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 11 ஆயிரத்து 114 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் இவ்விரு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, கே.எஸ்.ஆர் அணையிலிருந்து 4 ஆயிரத்து 114 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 7 ஆயிரம் கன அடி தண்ணீரும் தமிழகத்திற்கு திறக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக 8 ஆயிரத்து 128 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது 11 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 93.4 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 41.15 டிஎம்சியாக உள்ளது.