ஜி-20 இந்தியா: அனைவரையும் உள்ளடக்கிய நிதிமுறையை கடைக்கோடிப் பகுதிக்கும் கொண்டு செல்லுதல்
வி அனந்த நாகேஸ்வரன்,
சஞ்சால் சி சர்க்கார்

அனைவரையும் உள்ளடக்கிய நிதிமுறை என்பது பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு முக்கியமானது என்பது நீண்ட காலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது ஆக்கப்பூர்வமான பொருளாதாரத்தின் எல்லைக்குள் மக்களை இணைப்பது மற்றும் அதிகாரம் அளித்தல் என்பதோடு வறுமையைக் குறைப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்கிறது. நீடிக்கவல்ல மேம்பாட்டிற்கான 17 இலக்குகளில் 7 இலக்குகளை நிறைவேற்றுவதற்கு மிகச் சரியானதாக அனைவரையும் உள்ளடக்கிய நிதிமுறை அடையாளம் காணப்பட்டுள்ளது.

2010-ன் இறுதிப் பகுதியில் உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட்ட பின்னணியில் உலகளாவிய வளர்ச்சி செயல்பாட்டின் முக்கியமான தூண்களில் ஒன்றாக அனைவரையும் உள்ளடக்கிய நிதிமுறையை ஜி-20 நாடுகளின் தலைவர்கள் அங்கீகரித்தனர். ஜி-20 நாடுகளும் அதற்கு அப்பால் உள்ள நாடுகளும் அமல்படுத்துவதற்காக அனைவரையும் உள்ளடக்கிய நிதிமுறைக்கான செயல்திட்டத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டதோடு, அனைவரையும் உள்ளடக்கிய நிதிமுறைக்கான உலகளாவிய கூட்டமைப்பையும் நிறுவினர்.

இந்தக் கூட்டமைப்பு பயனுள்ள பல ஆவணங்களை உருவாக்கி, டிஜிட்டல் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய நிதிமுறைக்கான ஜி-20 உயர்நிலை கோட்பாடுகள் உள்ளிட்டவற்றை அமல்படுத்தியது.

கடந்த 10 ஆண்டுகளில் வளரும் நாடுகளில் திறனறி செல்பேசிகள், நிதி சார்ந்த தொழில்நுட்பங்கள் (ஃபின்டெக்ஸ்), அதிவேக இணையதளங்கள், ஆகியவற்றின் மூலம் நிதியைக் கையாள்வதற்கான டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் மிகப் பெரும் கிரியா ஊக்கிகளாக இருக்கின்றன. இதனால், டிஜிட்டல் மூலமான கணக்கு உரிமை இரட்டிப்பாகி 71%-ஐ எட்டியுள்ளது.

இருப்பினும், உலக மக்கள் தொகையில் 31% பேர் பெரும்பாலும் பெண்கள், ஏழைகள், குறைந்த அளவு கல்வி கற்ற இளைஞர்கள், இன்னமும் முறை சார்ந்த நிதிக் கட்டமைப்பிலிருந்து விடுபட்டுள்ளனர். டிஜிட்டல் வழியிலான நிதிமுறைச் சூழல் குறித்து சிந்திப்பதற்கான காலம் கணிந்துள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் நிதிமுறைக்கான புரட்சியின் புதிய அலையை ஏற்படுத்துவற்கான வழிமுறைகள் காணப்படுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளுக்குள் மாதாந்தர யுபிஐ பரி்வர்த்தனையில், 1.3 பில்லியன் ஆதார் பதிவுகள் மூலம் ரூ.12 லட்சம் கோடி பரிவர்த்தனையை இந்தியா எட்டியுள்ளது. ஜன்தன், ஆதார், செல்பேசி என்ற மும்முனை நடவடிக்கையின் கீழ், வங்கித்துறையில், 470 மில்லியன் பேர் பயனடைந்துள்ளனர். இவர்களில், 55% பேர் பெண்கள். 67% பேர் ஊரகம் மற்றும் சிறுநகரங்களில் வசிப்பவர்கள். நீடிக்கவல்ல நமது வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கு இன்னும் 7 ஆண்டுகளே உள்ள நிலையில், நிதிசார்ந்த சேவைகளில், இந்த வேகமும், அளவும், தரமும் டிஜிட்டல் வழியிலான அனைவரையும் உள்ளடக்கிய நிதிமுறைக்கு மாறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

ஜி-20 தலைமைத்துவத்தின் கீழ், அனைவரையும் உள்ளடக்கிய நிதிமுறைக்கான உலகளாவிய கூட்டமைப்பின் முதலாவது கூட்டத்தை நடத்துவதற்கு கொல்கத்தா தயாராகி வரும் நிலையில், நிதி சார்ந்த சேவைகளில் எளிதாக அணுகுதல், பயன்பாடு, தரம் என்ற மூவகை நோக்கங்களை எட்டுவதற்கும் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் பொருளாதாரத்தில் உற்பத்தித் திறனை விரிவாக்குவதற்கும் தொழில்நுட்ப ஊக்குவிப்புடன் அனைவரையும் உள்ளடக்கிய நிதிமுறையில் உள்ள சவால்கள் பற்றி இதில் விவாதிக்கப்பட உள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் உலகளவிலான பிரபல உரையாடல்கள் இதற்கான மதிப்புமிகு யோசனைகளை பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்கள்.

(வி அனந்த நாகேஸ்வரன், மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார தலைமை ஆலோசகர்; சஞ்சால் சி சர்க்கார் மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகர்).

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *