செயல்பாட்டுக்கு பட்ஜெட் ஒரு கருவி
கரண் பசின்
அரசியல் பொருளாதார வல்லுநர்
இந்திய அரசியலில் மிக முக்கியமான அம்சம் வாக்குறுதிகளாகும். அவற்றில் சில நிறைவேற்றப்படுவதும், பல நிறைவேறாமல் இருப்பதும் வாடிக்கை. தேர்தல் அறிக்கைகளும் அரசின் திட்டங்களும், சில நேரங்களில் பட்ஜெட் நடைமுறைகளும் அல்லது கூட்டணி நிர்ப்பந்தங்களும் வாக்கு அரசியலுக்கு பலியாக நேரிடும்.
2014-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த பல்வேறு வாக்குறுதிகளைப் பிரதமர் நரேந்திர மோடி 2018-ம் ஆண்டில் நிறைவேற்றி இருந்ததைக் காண முடிந்தது. வாக்குறுதிகளை நிறைவேற்றி வந்த நிலையில் பெருந்தொற்று குறிக்கிட்டுப் பொருளதார நடவடிக்கைகளுக்கு பெரும் குத்தகத்தை ஏற்படுத்தியது. இதனால் அரசின் நிதி நிலையும் பாதிக்கப்பட்டது.
2022-23 பட்ஜெட்டில் 34 பெரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டதை நாம் கண்டோம். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெவ்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகள் சம்பந்தப்பட்டதாக இருந்ததால் இவற்றைக் கால வரையறைக்குள் செயல்படுத்துவது கடினமாகும். எனவே அறிவிப்புகளைச் செயல்படுத்துவதில் முன்னேற்றம் அவசியமானது.
இந்தச் சூழ்நிலையில், இத்தகையப் பெரிய அறிவிப்புகளை செயல்படுத்துவதில் காணப்பட்ட ஏராளமான முன்னேற்றம் நமக்கு வியப்பளிக்கிறது. பட்ஜெட் அறிவிப்புகளைச் செயல்படுத்துவதில் நம்பகத் தன்மையை ஏற்படுத்துவதும், செயல்படுத்தாதவற்றில் கவனம் செலுத்துவது அவசியமாகும். இந்த இரண்டையும் அரசு செம்மையாக செயல்படுத்தி வருகிறது.
முந்தையப் பட்ஜெட்டில் பிரதமரின் விரைவுச் சக்தி அறிவிப்பு வெளியானது. உள்கட்டமைப்பு மேம்பாட்டை துரிதப்படுத்துவதும், பல்வேறு அமைச்சகங்கள் சம்பந்தப்பட்டதால் ஏற்படும் தாமதத்தை அகற்றவும் ஒரு தளத்தை இதன் நோக்கமாகும்.
தேசிய நெடுஞ்சாலைகளை 25,000 கிலோ மீட்டர் விரிவுப்படுத்தும் அறிவிப்பை நிதி அமைச்சர் கடந்த பட்ஜெட்டில் அறிவித்தார். மாநில சாலைகளைத் தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிப்பதற்கு மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைகளை அமைச்சகம் ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. புதிய தேசிய நெடுஞ்சாலைகள் குறித்து கொள்கைளை அறிவிக்கவும், அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சொத்துக்களை விற்பதன் மூலம் ரூ.20,000 கோடி திரட்டவும் அது திட்டமிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த சரக்குப் போக்குவரத்துப் பரிமாற்றத் தளம் மற்றொரு முக்கிய அறிவிப்பாகும். பல்வேறு போக்குவரத்து மூலம் சரக்குகளை கொண்டு செல்லவும், போக்குவரத்து செலவு மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தவும், சரியான நேரத்தில் சரக்குகளை விநியோகிக்கவும், அதிகப்படியான ஆவணங்களை ஒழிக்கவும் இது உதவும்.
வேளாண் துறையில் ட்ரோன்களைப் பயன்படுத்த நிதி அமைச்சகம் மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கி வருகிறது.
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வழங்கும் பட்ஜெட்டில் வெளியானது. இத்திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 80 லட்சம் வீடுகளைக் கட்டுவதற்கு நிதியமைச்சம் இலக்கு நிர்ணயித்தது. மொத்தம் 120.38 லட்சம் அனுமதிக்கப்பட்ட வீடுகளில் 104.12 லட்சம் வீடுகளில் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. செப்டம்பர் 30-ம் தேதி வரை 63.27 லட்சம் வீடுகள் ஒதுக்கப்ட்டுள்ளன.
2022-23 பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை செயல்படுத்துவதில் முந்தைய சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டுகளில் அரசு தனது சாதனைகளை முறியடிக்கும் என்பது திண்ணம்.