ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிராம உதயம் சார்பாக நடைபெற்ற ‘இளம்பெண்களின் தற்கொலைகளை தடுப்பதில் பெற்றோர்களின் பொறுப்பான கடமைகள் என்ற தலைப்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரை.

 

ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆறுமுகநேரி கோசல்ராம் திருமண மஹாலில் வைத்து இன்று (28.12.2022) கிராம உதயம் சார்பாக நடைபெற்ற ‘இளம்பெண்களின் தற்கொலைகளை தடுப்பதில் பெற்றோர்களின் பொறுப்பான கடமைகள்“ என்ற தலைப்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.*

 

*அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், தற்போது உள்ள சூழ்நிலையில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிமாகியுள்ளது. தற்கொலைக்களுக்கான காரணங்களில் கோபமும் ஒன்றாகும். கோபம் ஒரு வியாதி ஆகும். எந்த சூழ்நிலையிலும் கோபத்தை கட்டுபடுத்தினால் மட்டுமே நமது வாழ்க்கை சிறப்பானதாக அமையும். உடலை ஆரோக்கியமானதாக வைத்து கொள்ள விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது என்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள். நீங்களும் கடைபிடியுங்கள். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை மட்டும் கற்று கொடுத்து அவர்களை எந்தவித சூழ்நிலையிலும் பிரச்சினைகளை தைரியத்துடன் அணுக ஊக்கப்படுத்துங்கள். வெற்றி தோல்வி இரண்டுமே வாழ்க்கையில் முன்னேறுவதற்கான படிக்கட்டுகளாகும். தோல்வியை கண்டு சோர்வைடையாமல் அந்த தோல்வியே அடுத்த வெற்றிக்கான படிக்கட்டுகள் என்பதை தெரிந்து கொண்டாலே தற்கொலை எண்ணங்களை கைவிட்டு வாழ்க்கையில் சாதிக்க முடியும். ஆகவே குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையோடு பொதுநலத்தை கற்றுகொடுத்து வெற்றியாளர்களாக மாற்றுவது பெற்றோர்களது கடமை என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.*

 

*அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்படி கருத்தரங்கு கூட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 2000 மரக்கன்றுகள் வைத்திருந்த இடத்தை ரிப்பன்வெட்டி திறந்து வைத்து மரக்கன்றுகள் மற்றும் மஞ்சள் பைகளை பொதுமக்களுக்கு வழங்கி இயற்கை வளம் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.*

 

*இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம உதயம் நிறுவனர் மற்றும் நிரவாக இயக்குனர் திரு. சுந்தேரசன், நிர்வாக கிளை மேலாளர் திரு. வேல்முருகன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.*

 

*இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆவுடையப்பன், ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு. செந்தில், உதவி ஆய்வாளர் திரு. சதீஷ் உட்பட காவல்துறையினர் மற்றும் திருச்செந்தூர் தொழில்துறை ஆய்வாளர் திருமதி. ஜோதிலெட்சுமி, தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர்துறை உதவி ஆணையாளர் திரு. திருவள்ளுவன், தன்னார்வ தொண்டு தனி அலுவலர் திரு. ராமச்சந்திரன், பகுதி பொறுப்பாளர்கள் திருமதி. பிரேமா, திருமதி. ஆறுமுகவடிவு, திரு. முத்துச்செல்வன், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் பலர் கலந்து கொண்டனர்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *