கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து வடகிழக்குப் பகுதியில் அமைதி நிலவுகிறது, பொதுமக்கள் உயிரிழப்பு 80 சதவீதம் குறைந்துள்ளது,6000 கிளர்ச்சியாளர்கள் சரணடைந்தனர்; திரு தாக்கூர்

 

தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிப்பதே மத்திய அரசின் நோக்கம் என்று அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் இன்று தெரிவித்தார்.

 

தீவிரவாதத்திற்கு எதிராக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமது இல்லத்தில் அவர் செய்தியாளர்களிடம் விவரித்தார். சர்ஜிக்கல் தாக்குதல் முதல் பாலக்கோட் தாக்குதல் வரை தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதன் காரணமாக ஜம்மு காஷ்மீரில் 168 சதவீதம் அளவிற்கு தீவிரவாத சம்பவங்கள் குறைந்துள்ளதாக கூறினார். தீவிரவாத செயல்களுக்கு நிதி அளிப்பது 94 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக திரு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

 

வடகிழக்குப் பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் வன்முறை சம்பவங்கள் 80 சதவீதம் அளவிற்கும் உயிரிழப்புகள் 89 சதவீதம் அளவிற்கும் குறைந்துள்ளதாக கூறினார். அத்துடன் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 6000 கிளர்ச்சியாளர்கள் சரணடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

இப்பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை அவர் பட்டியலிட்டார்.

 

ஆயுதப்படையினருக்கான சிறப்பு அதிகார சட்டம் குறித்து பேசிய அமைச்சர் திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்கள் உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இச்சட்டத்தை அரசு திரும்பப் பெற்றதாக கூறினார். அருணாச்சலப்பிரதேசத்தில் 3 மாவட்டங்களில் இச்சட்டம் நடைமுறையில் உள்ளதாக அவர் தெரிவித்தார். அம்மாநிலத்தில் 60 சதவீதப் பகுதிகள் இச்சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அரசு மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து அவர் குறிப்பிட்டார்.

 

நடப்பாண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை ஆப்ரேஷன் கங்கா மூலம் 22,500 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஆப்ரேஷன் தேவிசக்தி மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து 670 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 

2021-22-ம் ஆண்டில் வந்தே பாரத் இயக்கத்தின் மூலம் கொவிட்-19 பாதிப்பின் போது 1.83 கோடி குடிமக்கள் தாயகம் அழைத்துவரப்பட்டதாக தெரிவித்தார். சீனாவில் வூகான் நகரில் இருந்து 654 பேர் மீட்கப்பட்டதாக கூறினார்.

 

இந்தியர்களை மட்டும் அல்லாமல் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களையும் மீட்பதற்கு இந்தியா உதவியதாக அவர் தெரிவித்தார். ஆபரேஷன் சங்கத் மோச்சான் வாயிலாக தெற்கு சூடானில் இருந்து 2 நேபாள நாட்டவர் உட்பட 155 பேர் மீட்கப்பட்டதாக கூறினார். ஆபரேஷன் மைதிரி மூலம் 170 வெளிநாட்டவர்கள் மற்றும் 5000 இந்தியர்கள் நேபாள நாட்டில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவித்தார்.

 

ஆபரேஷன் ரஹத் மூலம் 1962 வெளிநாட்டவர்கள் உட்பட 6710 பேர் மீட்கப்பட்டதாகவும், திரு அனுராக் தாக்கூர் குறிப்பிட்டார்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *