தமிழகத்தில் இதுவரை ஜெம் தளத்தில் ரூ.7400 கோடிக்கும் அதிகமான ஆர்டர்கள் விற்பனையாளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன

 

 

பத்திரிகை தகவல் அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் அரசு இ-சந்தை (ஜெம்) சென்னை சாஸ்திரி பவனில் இன்று விற்பனையாளர் மற்றும் ஊடகவியலாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஜெம் தளத்தின் புதிய அம்சங்கள், அதன் செயல்பாடுகள் குறித்து சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இடையே விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். மேலும் விற்பனையாளர்களுக்கு இந்த தளம் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கிறது என்பது குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் இது உதவியது. சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், புத்தொழில் நிறுவனங்கள் போன்ற விற்பனையாளர் குழுக்களுக்கு ஜெம் தளம் ஏராளமான வாய்ப்புகளை வழங்குவதுடன், மோடி அரசின் மேக்இன் இந்தியா முன் முயற்சியை வலுப்படுத்துகிறது.

 

தமிழக அரசின் கருவூலங்கள் மற்றும் கணக்கு ஆணையர் திரு விஜயேந்திர பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமைச் செயலாளர் திரு அண்ணாதுரை, ஜெம், துணைத் தலைமை நிர்வாக அதிகாரி திரு முரளீதரன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த திரு விஜயேந்திர பாண்டியன், 2016-ம் ஆண்டு முதல் ஜெம் தளம் இயங்கி வருகிறது என்றும், 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடந்துள்ளன என்றும் கூறினார். 2014-ம் ஆண்டில் இருந்து இன்று வரை தமிழக அரசு ரூ.1108 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகளை ஜெம் தளம் மூலம் செய்துள்ளது என்றும், மாநிலத்தில் ரூ. 7400 கோடிக்கும் அதிகமாக பரிவர்த்தனைகளை விற்பனையாளர்கள் மேற்கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். இதுபோன்ற விற்பனையாளர் கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் தமிழகத்திற்கு வெளியே உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட ஆகிய பல்வேறு மாநிலங்களில் வர்த்தகம் புரிவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும் விற்பனையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் விளக்கப்பட்டன. இந்த தளத்தின் மூலம் மத்திய, மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யும் வாய்ப்புகளை சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். சமுதாயத்தில் அனைவரையும் உள்ளடக்கும் வகையில் ஜெம் தளம், ஷெட்யூல்ட் வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு பதிவு கட்டண விலக்கு அளிக்கிறது.

 

செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் தலைமை இயக்குனர் திரு அண்ணாதுரை, பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கேற்ப ஜெம் தளத்தின் பயன்கள் உள்ளது குறித்து விளக்கினார். தமிழகத்தில் இருந்து மேலும் அதிக விற்பனையாளர்கள் இந்த இ-சந்தை தளத்தில் சேர்ந்து பயன்பெறும் வகையில், இந்த ஆன்லைன் தளம் குறித்த விழிப்புணர்வை கிராமப்பகுதிகளில் ஏற்படுத்துமாறு ஊடகத்துறையினருக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

 

ஜெம் தளத்தின் துணை தலைமைச் செயல் அதிகாரி திரு முரளீதரன் பேசுகையில், தளத்தின் பயன்கள் குறித்தும், எம்எஸ்எம்இ-க்கள், புத்தொழில் நிறுவனங்கள் அவற்றை அணுகும் விதம் குறித்தும் விளக்கினார். கடைசி மைல் பொது கொள்முதல், பரிவர்த்தனையில் சவால்கள் பற்றி குறிப்பிட்ட அவர், அனைவருக்கும் இந்த வசதி கிடைக்கும் வகையில் அரசின் இ-சேவைகள், அஞ்சல்துறை ஆகியவற்றுடன் ஜெம் தளம் கைகோர்த்துள்ளதாக தெரிவித்தார். தமிழ் உள்ளிட்ட 12 பிராந்திய மொழிகளில் விற்பனையாளர்களுக்கான உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

விற்பனையாளர்களுடனான கலந்தாய்வு அமர்வுக்கு இந்த நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தங்களது தொழில் வளர்ச்சியடைய, மத்திய மாநில அரசுதுறைகளுடன் இணைந்து விற்பனையை மேற்கொள்ளவும், இந்தியா முழுவதும் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு சந்தைகளை அணுகவும் ஜெம் தளம் எவ்வாறு உதவுகிறது என்ற தங்களது அனுபவங்களை விற்பனையாளர்கள் பகிர்ந்து கொண்டனர். அரசு பரிவர்த்தனைகளில் முன்பு காணப்பட்ட நிர்வாக சிக்கல்கள் நிறைந்த நடைமுறையை அகற்றி, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, உரிய நேர பணம் செலுத்துதல் ஆகியவற்றின் மூலம் எளிதாக தொழில் புரியும் வாய்ப்புகளை வழங்கி வரும் நடைமுறையை அவர்கள் பாராட்டினர்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *