ஓங்காரம் (ONKAARAM )தமிழ் திரைப்படம் நவம்பர் 4 இல் ரிலீசாகும்

‘அய்யன்’, ‘சேது பூமி ‘ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஏஆர். கேந்திரன் முனியசாமி (AR Kendiran Muniyasami) இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஓங்காரம்’. இதில் இயக்குநரான ஏஆர். கேந்திரன் முனியசாமி கதையின் நாயகனாக நடிக்க, கதாநாயகியாக நடிகை வர்ஷா விஸ்வநாத் (Varsha viswanath) நடித்திருக்கிறார். இவர்களுடன் ஸ்ரீதர், மதன் துரைசாமி, ஜிந்தா, முருகன், ஏழுமலையான்,சிவக்குமார்,டெல்டா வீரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

சாம் கே ரொனால்ட் (Sam K Ronald )ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு வி டி பாரதி மற்றும் வி டி மோனிஷ் (VT BHARATHI & VT MONISH) ஆகிய இரட்டையர்கள் இசையமைத்திருக்கிறார்கள். பல வெற்றிப்படங்களுக்கு பாடல்கள் எழதிய ஞானகரவேல் (Gnanakaravel ) இப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழதி இருக்கிறார்.கலை இயக்கத்தை ஜெயசீலன் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வி. எஸ். விஷால் மேற்கொண்டிருக்கிறார். கதையின் நாயகிக்கும், பெண்களின் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை யெல்லோ சினிமாஸ் (YELLOW CINEMAS )புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஈ. கௌசல்யா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் ரேகா மற்றும் கார்த்திகா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றி இருக்கிறார்கள்.

 

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், ” மதுரை மாநகரை கதை கள பின்னணியாக கொண்டு இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. மதுரையில் பிரபலமான தனியார் கல்லூரி ஒன்றில் உயர்கல்வி கற்கும் நாயகிக்கு, அக்கல்லூரியின் நிர்வாகத்தின் சார்பில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அவரின் குரல், பணபலம், அதிகார பலத்தால் நசுக்கப்படுகிறது. இந்நிலையில் சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் சமூக செயற்பாட்டாளர் ‘புலி’ எனும் கதாபாத்திரத்திடம் தன்னுடைய மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார். நாயகிக்கு – பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக புலி எனும் கதாபாத்திர மேற்கொள்ளும் தொடர் போராட்டங்களும், அதிகாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளும் தான் படத்தின் திரைக்கதை. தமிழகம் மட்டுமல்லாமல் ஓங்காரம் திரைப்படம் உலகம் முழுவதும் நவம்பர் 4 இல் ரிலீசாகிறது.

 

“ONKAARAM”

 

Cast & crew

 

AR Kendiran Muniyasami ,Varsha viswanath , Sridhar , Madhan DurIswamy , Jintha , Murugan ,yelumalayan,sivakumar,delta veera

 

Director : AR . Kendiran Muniyasami

 

DOP : Sam K Ronald

 

Music Director : VT BHARATHI & VT MONISH

 

Lyrics : Gnanakaravel

 

Editor : VS Vishal

 

Art Director : Jeyaseelan

 

Stunt : Fire Karthick

 

Choreography : Deena master

 

Producer : kowsalya E

 

Co Producer : Rekha ,Karthika

 

PRO : GOVINDARAJ / SIVAKUMAR

 

Songs :

 

1. Title track – Kozhikudu..

 

singer : Ramaniammal

 

Lyrics & composer : Gnanakaravel

 

 

 

2.Pulidevan –

 

Singer : VM MAHALINGAM

 

composer : VT Bharathi & VT Monish

 

Lyrics : Gnanakaravel

 

 

 

3.Onkaram Shivani –

 

Singer : JagadeshBabu , Biju, Ebi .

 

Composer : VT Bharathi & VT Monish

 

Lyrics : Gnanakaravel

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *