உறுமல் சத்தத்திற்கு சொந்தமான விலங்கை வரவேற்பதற்கு இந்தியா ஆவலாக உள்ளது.
சிறுத்தைகளுக்கு மீண்டும் வரவேற்பு
பூபேந்தர் யாதவ்,
(மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம், தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத் துறைகளுக்கான மத்திய அமைச்சர் அவார்)
சிறுத்தைகள் மீண்டும் திரும்புவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியுள்ள வேளையில் ஒரு காலத்தில் உயரிய மலை சிகரங்களையும் கடல்களையும் தாண்டி வனப்பகுதிகளில் எதிரொலித்த உறுமல் சத்தத்திற்கு சொந்தமான மிக வேகமான நில விலங்கை வரவேற்பதற்கு இந்தியா ஆவலாக உள்ளது. செப்டம்பர் 7- ஆம் தேதி இந்தியாவிற்கு சிறுத்தைகள் மீண்டும் திரும்ப உள்ளன. மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் விரைவில் சிறுத்தைகள் சுற்றித் திரியும்.
பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடுதல், விரிவான வாழ்விட மாற்றம் மற்றும் இறையின் தளம் சுருங்குதல் உள்ளிட்ட எண்ணற்ற காரணங்களால் இந்தியாவிலிருந்து சிறுத்தைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இயற்கை மீதான மனித சக்தியின் ஆதிக்கம் தான் மனித நடவடிக்கைகளால் தூண்டப்பட்ட இந்த செயல்பாடுகள் அனைத்திற்குமான காரணமாக உள்ளது. எனவே வனப்பகுதிகளில் சிறுத்தைகளை மீண்டும் இடம்பெறச் செய்வது என்பது சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட தவறை திருத்திக் கொள்வதற்கும், உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த தாரக மந்திரமான லைஃப் இயக்கத்தை நோக்கிய உறுதிப்பாட்டை நிலைநிறுத்தவும் ஓர் சந்தர்ப்பமாகும். நமது தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உயிர் வாழ்விற்கான தேவையை மனிதனின் பேராசை மீறாத மற்றும் விலங்குகள் உள்ளிட்ட இயற்கையுடன் மனிதர்கள் இணக்கமாக வாழும் உண்மையான உள்ளடக்கிய உலகை உருவாக்குவது தான் லைஃப் இயக்கத்தின் நோக்கமாகும். மனிதனே உயர்ந்தவன், தொழில்நுட்பத்தால் இயங்கும் இந்த மனித சக்தியால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்ற தோற்றத்தை மேற்கத்திய வளர்ச்சி மாதிரி உருவாக்கியது. ஆனால் இந்த மாதிரி, ஏராளமான உயிரினங்கள் அழிவதற்கு காரணமாக இருந்ததோடு, பூமியின் இயக்கத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இயற்கையை பாதுகாத்தால், இயற்கை நம்மை காக்கும் என்ற நம்பிக்கையை காலம் காலமாக இந்தியா பின்பற்றுகிறது.
நமது மக்கள் தொகையின் அளவு மற்றும் வளர்ச்சிக்கான தேவைகள் இருந்த போதும், புலிகள், சிங்கங்கள், ஆசிய யானைகள், ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் உள்ளிட்ட பல முக்கியமான உயிரினங்களையும் அவற்றின் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் நம்மால் பாதுகாக்க முடிந்தது. புலிகள், சிங்கங்கள் மற்றும் யானைகளுக்கான பிரத்தியேக திட்டங்களினால் இது போன்ற முக்கியமான உயிரினங்களின் எண்ணிக்கையையும் கடந்த சில ஆண்டுகளில் நம்மால் உயர்த்த முடிந்தது.
சிறுத்தைகளுக்கான திட்டமானது, புறக்கணிக்கப்பட்ட வாழ்விடங்களை மீட்டெடுப்பதற்கான ஆதாரங்களைக் கொண்டு வருவதோடு, அவற்றின் பல்லுயிரைப் பாதுகாத்து, சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளையும் மேம்படுத்தும் நடவடிக்கையாகும்.
தனது எதிர்கால சந்ததியினருக்கு பூமியின் பாதுகாவலராக, ஓர் நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் வாக்குறுதியை நிறைவேற்றுவதை நோக்கி இந்தியா முன்னேறும் வேளையில், தனது சுற்றுச்சூழலின் சரிவை மாற்றி அமைத்து, சிறுத்தையை சிறந்த வேட்டையாடும் உயிரினமாக மீண்டும் கொண்டுவர இந்தியா முடிவு செய்துள்ளது.
தற்போது குனோவில் சிறுத்தைகள் மீண்டும் கொண்டுவரப்பட உள்ள நிலையில், அவற்றின் எண்ணிக்கை அதிகரித்த பிறகு குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் சிறுத்தைகளை மீண்டும் கொண்டு வருவது பற்றி முயற்சி மேற்கொள்ளப்படும்.