மகளிர் நெகிழ்வுடன் கூடிய பணியிடங்கள் போன்றவற்றை,
நெகிழ்வுடன் கூடிய பணியிடங்கள் போன்றவற்றை, மகளிர் பங்களிப்புக்கான வாய்ப்பாக பயன்படுத்தலாம்.
-முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் பேராசிரியர் கே.வி.சுப்ரமணியன்
நெகிழ்வுடன் கூடிய பணியிடங்கள், வீட்டிலிருந்து பணியாற்றும் முறை மற்றும் பணியாற்றுவதற்கான நெகிழ்வான நேரம் போன்றவை எதிர்காலத்துக்கு தேவை. நெகிழ்வான பணியிடங்கள் போன்றவற்றை, மகளிர் பங்களிப்புக்கான வாய்ப்பாக பயன்படுத்தலாம் என முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் பேராசிரியர் கே.வி.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
பிரதமரின் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம், பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்டவை தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை அளித்துள்ளன. இந்த திட்டங்கள் மூலம், அமைப்புசாரா துறையை சார்ந்த தொழிலாளர்களுக்கு, தங்களின் கடின உழைப்பை நாடு சமமாக மதிக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கொவிட் பெருந்தொற்று பாதிப்பின்போதும், நமது பொருளாதாரத்தில், நாட்டின் இந்த முயற்சிகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ‘பிரதமரின் அவசரகால உத்தரவாதத் திட்டம்’ லட்சக்கணக்கான சிறுதொழில்களுக்கு உதவி செய்துள்ளது. கொரோனா காலத்தில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்திலிருந்து, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தொழிலாளர்களுக்கு முன்பணமாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நண்பர்களே, தொழிலாளர்களுக்கு அவர்களின் தேவையின்போது நாடு எவ்வாறு உதவியதோ, அதே வழியில் பெருந்தொற்றிலிருந்து மீள்வதற்கு தொழிலாளர்கள் தங்களின் முழு பங்களிப்பையும் செலுத்தியுள்ளனர்.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும், 400 துறைகளைச் சேர்ந்த 28 கோடி தொழிலாளர்கள் இ-ஷ்ரம் இணையப்பக்கத்தில் தங்களை பதிவு செய்துள்ளனர். இதனால் குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் பயன் பெற்றுள்ளனர். தற்போது இவர்களும் யுனிவர்சல் அக்கவுண்ட் எண் உள்ளிட்ட வசதிகளை பெறுகிறார்கள். தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக, தேசிய தொழில் சேவை, அசீம் இணையப்பக்கம், உதயம் இணையப்பக்கம் ஆகியவற்றுடன் ‘ இ-ஷ்ரம் இணையப்பக்கம்’ இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் அடிமை மனநிலையை போக்குவதற்காக, காலனித்துவ ஆட்சியிலிருந்த சட்டங்களை ஒழிப்பதற்கான முயற்சிகளை எடுத்துள்ளோம். நாடு தற்போது இத்தகைய தொழிலாளர் சட்டங்களை மாற்றி, சீர்திருத்தம் செய்து எளிமையாக்கியுள்ளது. இதனை மனதில் கொண்டு. 29 தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர்களுக்கான நான்கு எளிய சட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதன் வாயிலாக நமது தொழிலாள சகோதர, சகோதரிகள், குறைந்தபட்ச ஊதியம், தொழில் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்றவற்றில் மேலும் அதிகாரம் பெறுகின்றனர். புதிய தொழிலாளர் குறியீடுகளில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான வரையறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தால் நமது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பயன் பெற்றுள்ளனர்.
நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகமும், 2047-ம் ஆண்டின் ‘அமிர்த காலத்’துக்கான திட்டங்களை தயாரித்து வருகிறது. நெகிழ்வுடன் கூடிய பணியிடங்கள், வீட்டிலிருந்து பணியாற்றும் முறை மற்றும் பணியாற்றுவதற்கான நெகிழ்வான நேரம் போன்றவை எதிர்காலத்துக்கு தேவை. நெகிழ்வான பணியிடங்கள் போன்றவற்றை, மகளிர் பங்களிப்புக்கான வாய்ப்பாக பயன்படுத்தலாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.