6 ஜி தொழில்நுட்பத்தை இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் இந்தியா கொண்டு வரும்: பிரதமர் நரேந்திர மோடி
கனவுகள் என்பது உங்களை விழித்திருக்க செய்வதே: மத்திய இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார்
கனவுகள் என்பது உங்களை விழித்திருக்க செய்வதே என்று மத்திய கல்வி இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் பேசினார்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் நடந்த ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி காணொலி வழியாக மாணவர்களிடம் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ் ஆர் எம் கல்லூரியில் கலந்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் அதிக மக்கள் பங்கேற்புடன் பெரிய விழாவாக நடந்துள்ளது என்றார். இந்திய இளைஞர்கள் புதிய தொழில்நுட்பம் மூலம் வேளாண் துறை வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என தெரிவித்தார். இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் 6ஜி தொழில்நுட்பத்தை இந்தியா கொண்டு வரும் என்றார்.
இந்த நிகழ்வில் எஸ் ஆர் எம் கல்லூரியில் கலந்துக் கொண்ட மாணவர்களிடம் கலந்துரையாடிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் சுபாஷ் சர்க்கார், கனவு என்பது உங்களை தூங்கவிடாமல் விழித்திருக்க வைத்திருப்பதே என்று தெரிவித்தார். மேலும், ஹெக்கத்தான் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களை பாராட்டிய மத்திய இணையமைச்சர், மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்கள் மனித குல வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என தெரிவித்தார்.