பொதுமக்கள் அமைச்சரிடம் குற்றச்சாட்டு உடனடியாக அதிகாரியிடம் பேசி தீர்வு
அறந்தாங்கி ஒன்றியத்துக்குட்பட்ட திருநாளூர் தொடக்கப் பள்ளிக்கு 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமையல் கூடத்தை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்
சிவ.வீ. மெய்யநாதன் திறந்து வைத்தார். அதே பகுதியில் கோவிலுக்கு செல்லும் சாலைக்கு புதிய பேவர் பிளாக் சாலைக்கு அடிக்கல் நாட்டினர். அப்போது அப்பகுதியில் 100 நாள் வேலை பார்க்கும் பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது கூறிய பெண்கள் அப்பகுதி வரும் அரசு நகர பேருந்து ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என பேருந்து வருவதில்லை என்று அமைச்சரிடம் கூறினர். இதில் சில பேருந்துகள் காலையில் மட்டும் வருவதில்லை மாலையில் வரும் என்று குற்றச்சாட்டுகளை வைத்தனர். அப்போது அமைச்சர் உடனடியாக அரசு போக்குவரத்து கழக மேலாளியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்பகுதியில் இயங்கும் அனைத்து பேருந்துகளையும் முறையாக இயக்க வேண்டும் எனவும் ஞாயிற்றுக்கிழமை பேருந்துக்கு விடுமுறை விடாமல் இயக்க வேண்டும் எனவும் மேலாளியிடம் கூறி உடனடி நடவடிக்கை எடுத்தார். இதற்கு அந்த பகுதி பெண்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். இதே போல் ஆவணத்தாங்கோட்டை பகுதியில் புதிய பேவர் பிளாக் மயானச் சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் செய்து வைத்தார் பின்பு அங்கிருந்த பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் செல்வி, கோட்டாட்சியர் சொர்ணராசு, வட்டாட்சியர் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.