ரோட்டரி சங்கங்கள் நடத்திய ரத்ததான முகாம்
400-கும் மேற்பட்டோர் ரத்த கோடை வழங்கினர்
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை ஜெமினி ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை ரேனியசென்ஸ் ரோட்டரி சங்கம் நடத்திய ரத்த தான முகாம் மதுரவாயலில் நடைபெற்றது. இந்த முகாமில் 400 -கும் மேற்பட்ட ரத்த கொடையாளர்கள் பங்கு கொண்டு தனது ரத்தத்தை தானமாக வழங்கினர். இந்த ரத்த தான முகாமில் திட்ட தலைவர் மஹபூ பாஷா, மாவட்ட தலைவர்கள் சூரியநாராயணராவ் மற்றும் கான், திட்ட துணை தலைவர் மோஹித் பாட்டியா மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.