கோவை மாவட்டம் சூலூர் தாலுகா இருகூர் பேரூராட்சி அத்தப்ப கவுண்டன் புதூர் எல் &டி- பைபாஸ் அருகில் விவசாயிகள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு கோவை மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார்.
சங்கத்தில் உள்ள மாநில மாவட்ட வட்டார பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். சங்கத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை கூட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் வட்டார இளைஞரணி தலைவராக விக்னேஷ் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் புதிதாக சூலூர் வட்டார இளைஞரணி தலைவராக இருகூர் கே.பாலசுப்பிரமணியம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கூட்டத்தின் முடிவில் வருகை புரிந்த சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் சங்கத்தின் சார்பாக நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர்
ஏ. எஸ்.பாபு நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.