பீளமேட்டில் மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு
கோவை பீளமேடு அருகே உள்ள நேரு நகரை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது மனைவி கமலம் (வயது 77). சம்பவத்தன்று இவர் டெக்ஸ் பார்க் வழியாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் கமலம் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் 5 பவுன் தங்க செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.