கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலக் கூட்டம்
மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
கோவை
மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் முத்துராமலிங்கம் , மாநகராட்சி பொதுக் கணக்குக் குழு தலைவர் திருமதி. தீபா தளபதி இளங்கோ , நிர்வாகப் பொறியாளர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் நவீன்குமார் ஜி.வி, பொன்னுசாமி.எஸ், கோவிந்தராஜ்.எம், விஜயகுமார்.கே, சரஸ்வதி.பெ, கோவை பாபு செல்வகுமார்.மு, மணியன்.கே, பூபதி , கீதா.சே, அம்சவேணி.ம, மோகன்.மே.தூ, பாக்கியம்.எஸ், தர்மராஜ்.த, சாந்தாமணி.ப, சுமித்ரா.எம், சிங்கை சிவா , ஆதிமகேஸ்வரி , மாநகராட்சி பொறியாளர்கள் , அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சிறுவாணி குடிநீர்த் திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையில் நீர் சேமிப்பை அதிகரிக்கக் கோரி மாண்புமிகு கேரள முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதி கோவை மாநகரில் நிலவிய குடிநீர் பிரச்சனையை தீர்க்க துரித நடவடிக்கை எடுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் , மாண்புமிகு. தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது
மேலும் வார்டு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களின் சொத்து வரி, காலியிட வரி, வரைபட அனுமதி உள்ளிட்ட கோப்புகளை உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களுக்கு அளிக்க வேண்டும் என்றும், குடிநீர் திட்டப் பணிகள் , பாதாள சாக்கடை பணிகள் துரிதமாக நடைபெற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
மாநகரில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ள நிலையில் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 57வது வட்டத்தில் இருக்கும் ஏபிசி சென்டரில் நாய்களை பராமரிப்பதற்கு உண்டான பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் சுகாதாரம், சாலை வசதி, தெரு விளக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது .