தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் தொழிற்சங்கத்தின் திருப்பூர் மாவட்ட அலுவலக திறப்பு விழா மாவட்ட தலைவர் கராத்தே மணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் சார்பாக திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிணைந்து சேடர்பாளையத்தில் சங்க அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் #தமிழ்நாடு #செய்தித்துறையினர் #யூனியன் மாநிலத் தலைவர் ஸ்ரீதர்,
பொதுச்செயலாளர் கொளத்தூர் நண்பன் சத்யா,
துணைத்தலைவர் மாலை முரசு அகமது அலி,
இணைச்செயலாளர் கொளத்தூர்நண்பன் கார்த்திகேயன்,
மாநில அமைப்பு செயலாளர் அரசு மலர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில்,
சங்க அலுவலகத்தை மாநில தலைவர் ஸ்ரீதர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட பெருமாநல்லூர் காவல் ஆய்வாளர் திருமதி. ஹேமலதா, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பேரவை நிறுவன தலைவர் பசும்பொன் பாலு, மற்றும் மாநில நிர்வாகிகள் குத்துவிளக்கேற்றினர்… முன்னதாக வாவி பாளையம் கூட்டு ரோட்டில் இருந்து பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி ஆரவாரத்துடன், மாநில நிர்வாகிகளை ஊர்வலமாக அழைத்து வந்தனர்… இந்நிகழ்ச்சியில் சங்க வளர்ச்சி குறித்தும், உறுப்பினர்கள் சேர்ப்பு பற்றியும், மாநில தலைவர் ஸ்ரீதர் ஆலோசனை வழங்கி, தலைமை அலுவலகத்தின் சார்பில் நிதியுதவி ரூ. 5000க்கான காசோலையை வழங்கினார். திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு, இரு சக்கர மற்றும் நான்கு வாகன ஸ்டிக்கரும் வழங்கப்பட்டது… இறுதியில் அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது… இதில் கொங்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் அம்மா எக்ஸ்பிரஸ் இணை ஆசிரியர் சுரேஷ், மாவட்ட தலைவரும் புதிய மாற்றம் இதழின் உதவி ஆசிரியருமான பேராசிரியர் கராத்தே மணி, மாவட்ட செயலாளரும் வணக்கம் தமிழகம் நாளிதழின் மாவட்ட நிரூபருமான மருதமுத்து, மாவட்ட பொருளாளர் நீதி வலை முதன்மை ஆசிரியர் பார்த்திபன், பாரத் முன்னணி சார்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் சுரேஷ், நிர்வாகி அண்ணாதுரை, திருப்பூர் மாவட்ட இணை செயலாளர் மகா ராஜா,… சங்க தென் சென்னை மாவட்ட செயலாளர் நமது கோட்டை செல்வகுமார், கடலூர் மாவட்ட செயலாளரும் நமது கோட்டை ஆசிரியருமான ஆதித்யன், வெற்றிப்பாதை ஆசிரியர் வரதராஜன், ஆராய்ச்சி மணி ஆசிரியர் கனி ராஜா, அரசியல் மாற்றம் ஆசிரியர் அருள் குமரன், காலை தமிழகம் பாண்டியராஜன், காவல் செய்தி அரவிந்த், கோவை சாரதி சந்திரமூர்த்தி, காலை தமிழகம் ஆரிய குமார், வணக்கம் தமிழகம் அரவிந்த் குமார், இன்றைய தமிழகம் ரவி, தினச்செயல் குருநாதன், தமிழ் மலர் காளிதாஸ், நீதிவலை லோகேஷ், நீதிவலை முகமது உஷ்மான், மக்கள் ஆணையம் ரங்கநாதன், போலீஸ் எக்ஸ்பிரஸ் மணி, அரசியல் ஒளி வடிவேல், ரகசிய உளவாளி மோகன் குமார், தூத்துக்குடி அரசு மலர் நிரூபர் பன்னீர் செல்வம், நட்புக்காக வசந்த், இசக்கி முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அம்மா எக்ஸ்பிரஸ் விக்னேஷ் நன்றியுரையாற்றினார். இதில் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் இருந்து செய்தியாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.